ராணுவ ரகசியங்களை திருடிய மேனகா காந்தி மகன் வருண் காந்தி பா.ஜ.க,விலிருந்து நீக்கம்? அரசியல் நாடகமே
மத்திய மந்திரி மேனகா காந்தியுடைய மகனும் , பா.ஜ., - எம்.பி.,யுமான, வருண் காந்தி , சூழ்ச்சி வலையில் சிக்கியதாகவும், அது, வெளி யில் தெரியாமல் இருக்க, ராணுவ ஆயுதங்கள் தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்த ரகசியங் களை கசியச் செய்ததாகவும் புகார் எழுந்தது. இதனால், அவரை கைகழுவ, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வருணிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு இதற்க்கு முழு கரணம் பிஜேபி  என்னுடைய வளர்ச்சி பிடிக்காதவர்கள் பழிதீர்த்துவிட்டார்கள் என்றுகூறினர்  உங்களுடைய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில்  வெளியாகியுள்ளதே என்று கேட்ட கேள்விக்கு பத்தி ஏதும் கூறாமல் சென்றுவிட்டார்  ஆனால் இதில் பல மர்மங்கள் உள்ளது என்பது மட்டும் உண்மை

உ.பி., மாநிலம் சுல்தான்பூர் தொகுதியிலிருந்து, பா.ஜ., சார்பில் போட்டியிட்டு, எம்.பி., ஆனவர், வருண்; இவர், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின் பேரன்; மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா வின் மகன்; முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ ஆலோசனைக்குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.

வருணுக்கு நெருக்கமான, அபிஷேக் வர்மா, ஆயுதங்கள் விற்கும் டீலராக உள்ளார். அபிஷேக் வர்மா, 2005ல், கடற்படை தொடர் பான ரகசியங்களை வெளியிட்டது குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். அதுதொடர்பாக, அமெரிக்காவை சேர்ந்த, ஊழல் அம்பலப்படுத்தும் ஆர்வலர் எட்மாண்ட்ஸ் ஆலன், சி.பி.ஐ.,க்கு பல ஆவணங்களையும், 'சிடி'க்களில் புகைப்படங்களையும், பல ஆண்டு களாக அனுப்பி வைத்துள்ளார்.இந்நிலையில், விலைமாதர்களுடன், வருண் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்கள் உள்ள, 'சிடி' மற்றும் கடிதத்தை, பிரதமர் அலுவலகத்துக்கு, எட்மாண்ட்ஸ் ஆலன், கடந்த மாதம் அனுப்பி வைத்திருந்தார்.

அந்த புகைப்படங்களை காட்டி, வருணிடம் ராணுவ ஆயுதங்கள் குறித்த ரகசியங்களை,
அபிஷேக் கறந்ததாக கடிதத்தில் குற்றஞ் சாட்டப்பட்டிருந்தது. இந்த கடிதத்தை, ஸ்வராஜ் அபியான் அமைப்பு தலைவர்கள் யோகேந்திர யாதவ், பிரஷாந்த் பூஷண் ஆகியோர், சமீபத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். கடிதத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்களை கடுமை யாக மறுத்துள்ள வருண், ஸ்வராஜ் அபியான் தலைவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப் போவதாக எச்சரித்திருந்தார். அடுத்தாண்டு துவக்கத்தில், உ.பி.,யில் நடக்கும் சட்டசபைத் தேர்தலில், தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும்படி, வருண் நச்சரித்து வந்தார்.

இந்நிலையில், வருண் தொடர்பாக வெளியான, 'சிடி' பா.ஜ., வட்டாரத்தில் கடும் அதிர்ச்சி அலை களை ஏற்படுத்தி உள்ளது. இதனால், பா.ஜ.விலி ருந்து, வருண் கழற்றி விடப்படுவார் எனத் தகவல் கள் கூறுகின்றன.மேலும், இந்த விவகாரம் தொடர்பான விசாரணை களில், பா.ஜ., மேலிடம் எவ்விதத்திலும் குறுக் கிடாது என்றும்,பா.ஜ., வட்டாரங்கள் கூறுகின்றன.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.