அஜ்மான் கடற்கரை கண்காணிப்பில் அதிநவீன குட்டி விமானங்கள்! அறிமுகம்இது குட்டி விமானங்கள் (Drones) விஸ்வரூபம் எடுத்து வரும் காலம். ராணுவரீதியில் தயாரிக்கப்பட்ட இத்தகைய குட்டி விமானங்களை கொண்டு அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகள் மக்களை குண்டுவீசிக் கொல்ல பயன்படுத்தி வரும் நிலையில் பல நாடுகள் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர் ஆனால் இந்த குட்டி விமானங்களின் வடிவம் தான் வேறுபடும்.

அஜ்மான் நகர கடற்கரையில் ஆபத்திலுள்ளோருக்கு உதவும் வகையில் அதிநவீன தொழிற்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட குட்டி விமானங்கள் தற்போது பரீட்ச்சார்த்தரீதியாக அஜ்மான் கடற்பரப்பை ரோந்து சுற்றி வருகின்ற நிலையில் இதுவரை வரை இந்த குட்டி விமானத்தின் துணையால் 13 சம்பவங்கள் கண்டறியப்பட்டள்ளன. பெரும் ஆபத்திலிருந்த இருவர் காப்பற்றப்பட்டுள்ளனர்.

இந்த குட்டி விமானத்தின் சிறப்பம்சங்கள்:
1. 4 வட்டவடிவ மிதவைகளையுடையது.
2. அதிநவீன கேமிரா பொருத்தப்பட்டது.
3. கடல் காற்றை சமாளித்து பறக்கக்கூடியது.
4. பொருட்களை 38 மடங்கு பெரிதாக்கி காட்டக்கூடியது.
5. கடற்பரப்பின் மேல் ஆபத்தில் தத்தளிப்போரை சென்சார் உதவியுடன் கண்டறியக்கூடியது.
6. ஹேக்கர்களால் முடக்க முடியாதவகையில் ரகசிய குறியீடுகளை கொண்டது.

விரைவில், இந்த குட்டி விமானங்கள் அமீரகம் முழுவதும் கடறற்கரை பாதுகாப்புச் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அஜ்மான் நகர சிவில் பாதுகாப்பு துறையின் மீடியா இயக்குனர் கோலனல் நாஸர் ரஷீத் அல் ஜிர்ரி அவர்கள் தெரிவித்தார்.

Source: 7 Days

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.