பஞ்சாப் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கொலைக்கு பொறுப்பேற்ற சீக்கிய குழுபஞ்சாப் மூத்த ஆர்.எஸ்.எஸ்.  தலைவர் ஜகதீஷ் கக்னேஜா மற்றும் சிவ சேனா தலைவர் துர்க்கா பிரசாத் குப்தா ஆகியோர் கொல்லப்பட்டதற்கு பொறுப்பேற்று தஷ்மேஷ் றெஜிமென்ட் என்கிற சீக்கிய அமைப்பு ஊடகங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி அடையாளம் தெரியாத இருவரால் கக்னேஜா சுடப்பட்டார். இதில் ஏற்ப்பட்ட காயங்களால் கடந்த வியாழக் கிழமை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட இந்த கடிதத்தில் ராஜிந்தர் சிங் என்பவர் கையொப்பமிட்டுள்ளார். மேலும் தனது கடிதத்தில், கக்னேஜா சீக்கிய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதினால் அவரை தாங்கள் சுட்டுக்கொன்றதாக தெரிவித்துள்ளார். மேலும் கக்னேஜா ஆர்.எஸ்.எஸ். சாகாக்களை ஒவ்வொரு கிராமமாக எடுத்துச் சென்று சீக்கிய மதத்தை இந்து மதத்தோடு சேர்க்க முயற்ச்சித்தார் என்றும் கூறியுள்ளார். இதே தான் சிவ சேனா தலைவர் துர்கா பிரசாத் குப்தாவும் செய்ததாகவும் அவர் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு வந்துள்ள இந்த கடிதம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்ட IP முகவரியை கண்டறியும் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.