நான்... நான்... நான்... என்று அகந்தை கொள்ளும் மனிதர்களுக்கு - சிந்திக்க



நான் சம்பாதித்தேன்,

நான் காப்பாற்றினேன்,

நான் தான் வீடு கட்டினேன்,

நான் தான் உதவி  செய்தேன்,

நான் உதவி  செய்யலனா? அவர்  என்ன ஆகுறது!!!!!

நான் பெரியவன்,

நான் தான்  வேலை  வாங்கி  கொடுத்தேன்,

நான்  நான்  நான்  நான்  என்று  மார்தட்டி  கொள்ளும் மனிதர்களே!!!

நான் தான்  என் இதயத்தை இயக்குகிறேன்  என்று  உங்களால் சொல்ல முடியுமா?

நான் தான்  என் மூளையை  இயக்குகிறேன் என்று  உங்களால் சொல்ல முடியுமா?

நான் தான்  என் இரண்டு  கிட்னியையும்  இயக்குகிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா?

நான் தான் என் வயிற்றில்  சாப்பிட்ட உணவில்  இருந்து சத்துக்களை  தனியாக  பிரித்து  இரத்தத்தில்  கலக்குகிறேன் என்று  உங்களால்  சொல்ல முடியுமா??

நான் தான்  பூக்களை  மலர  வைக்கிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா ?

நான் தான்  காய்களை பழமாக மாற்றுகிறேன் என்று  உங்களால் சொல்ல முடியுமா ?

நான் தான் கடலில்  மீன்  பிடிக்கிறவனுடைய வலையில்  மீனை சிக்க  வைக்கிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா?

இவைகள் அனைத்தையும்  எவன்  செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே "நான்" என்று  சொல்வதற்கு அதிகாரமும்  உரிமையும்  உண்டு..

ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பாக இருங்கள்.
 உலகைப்பற்றிக்கவலைப்படாதே ஏனெனில் அது அல்லாஹ்வுக்குரியது.

உணவைப்பற்றி கவலைப்படாதே !அது அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது.

எதிர்காலம் குறித்தும் கவலைப்படாதே! அதுவும் அல்லாஹ்வின் கரத்தில் தான் உள்ளது
அல்லாஹ்வை எப்படி திருப்திப்படுத்துவது என்பது பற்றி மட்டும் கவலைப்படு                      
மனித!!!
நான் நான் என்று நினைக்காதீர்கள் நினைத்தல்

இறைவன்  தான்  யார் என்பதை காட்டிவிடுவன்

அதை நம்மால் தாங்க இயலாது ....

அல்லாஹு அக்பர் .....
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.