சவுதி அரேபியாவின் பொருளாதாரம் குறுகிய காலத்தினுள் மீள் எழுச்சி. பெற்றுள்ளது! - ஐ.எம்.எப்.உலக சந்தையில்  கச்சா எண்ணெய் விலை சரிவால் கடும் நெருக்கடியை சந்தித்த சவுதி அரேபியாவின் பொருளாதாரம் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பிறகு வளர்ச்சி பாதையில் செல்வதாக சர்வதேச நிதியமான ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது.

உலக சந்தையில்  கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 2-வது இடத்தில் இருந்த சவுதி அரேபியா கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.

இதனை சமாளிக்க கடந்த வாரம் சர்வதேச அளவில் 17.5 மில்லியன் டாலர் தொகைக்கான சர்வதேச பத்திரங்களை அந்நாட்டு அரசு வெளியிட்டது.

இந்நிலையில் சவுதி அரேபியாவின் பொருளாதாரம் 1.2 சதவீதம் உயர்ந்துள்ளதாக சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் பொருளாதார வளர்ச்சி 2 சதவீதமாக உயரும் என்று அந்நாட்டு நிதி அமைச்சர் இப்ராஹிம் அல் ஹசப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியின் மூலம் கிடைக்கும் வருமானம் நாட்டின் மொத்த வருமானத்தின் 75 சதவீதமாகும்.

 நடப்பாண்டில் 6.35 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட் பற்றாக்குறை ஏற்பட்டதால் அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.