இந்தியாவின் எஸ்ஸார் ஆயில் நிறுவனம் ரஷ்யா வாங்கியது ப்ரோக்கர் மோடி முன்னிலையில் கையெழுத்து.இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமாக திகழும் எஸ்ஸார் ஆயில் நிறுவனம் ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ரோஸ்நெப்ட் நிறுவனத்தின் வசமாகி உள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று பனாஜியில் கையெழுத்தானது. எஸ்ஸார் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமான குஜராத்தில் இயங்கும் வாடினார் எண்ணெய் சுத்திகரிப்பு துறைமுகம், பெட்ரோல் பம்புகள் ஆகியவற்றின் 49 சதவீத பங்குகளை ரோஸ்நெப்ட் நிறுவனமும், மீதமுள்ள 49 சதவீத பங்குகளை நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்டு திகழும் டிராபிகரா குழுமம் மற்றும் ரஷ்ய முதலீட்டு நிறுவனமும் இணைந்து வாங்கியுள்ளன.

மீதமுள்ள 2 சதவீத பங்குகள் சிறுபான்மை பங்குதாரர்களிடம் இருப்பதால் விற்க இயலவில்லை. இருப்பினும் எஸ்ஸார் நிறுவன முழுக்கட்டுப்பாடும் தற்போது ரஷ்ய நிறுவனத்திடம் சென்று விடும். இதற்காக ரூ. 88 ஆயிரம் கோடி வழங்கப்பட உள்ளது. முழு நிதியும் 2017 காலாண்டிற்குள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.