மகாத்மா காந்தியை படுகொலை செய்த ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு ஐகோர்ட் அனுமதிசென்னை உயர் நீதிமன்றத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., இணை செயலாளர் ஜோதிந்திரன் உள்ளிட்ட 14 பேர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) சார்பில்,  தமிழகத்தில் அக்டோபர் 9ம் தேதி ராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி, அம்பேத்கரின் 125வது ஜெயந்தி, விஜயதசமி ஆகியவை கடைபிடிக்கும் விதமாக கோவையில் 3 இடங்களில், குமரியில் 2 இடங்களில், திருச்சி, மதுரை, தஞ்சை, நாகை  உள்ளிட்ட மாவட்டங்களில்  14 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தங்கள் சீருடை அணிந்து அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். அந்த அணிவகுப்பிற்கு அனுமதி அளிக்க போலீசார் மறுத்துவிட்டனர். இது சட்டவிரோதமானது. எனவே பேரணிக்கு அனுமதி வழங்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் .
இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு  நீதிபதி ராஜேந்திரன் முன்பு மீண்டும் விசாரனைக்கு வந்தது. அப்போது போலீஸ் சார்பில் அரசு வக்கீல் குமார் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் பேரணிக்கு அனுமதி தரக்கூடாது, தற்போது உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. எனவே இதற்கு போலீஸ் பாதுகாப்பு தர முடியாது என்று கூறியிருந்தார். அதை படித்துப் பார்த்த நீதிபதி, உள்ளாட்சி தேர்தல் இந்த மாதத்தில் நடைப்பெற இருப்பதால் காவல்துறை ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு பாதுகாப்பு வழங்க முடியாத நிலை உள்ளது. எனவே இந்த மாதம் அனுமதி அளிக்க முடியாது என்றார்.  அப்போது ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஆஜராகி வக்கீல் சந்திரசேகர், ரபுமனோகர் ஆகியோர், விஜயதசமி தினத்தன்று தான் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தொடங்கப்பட்டது. எனவே ஆர்.எஸ். எஸ்., அணிவகுப்பை நவம்பர் மாதம் 6 ம் தேதி அல்லது 13 ம் தேதி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என கோரினார்.

இதை கேட்ட  நீதிபதி,  பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மக்களின் மத உணர்வுகளை பாதிக்காத வகையில் அணிவகுப்பு நடத்த வேண்டும், ஆர் எஸ் எஸ் அணிவகுப்பில்  முழுக்கால் சட்டை அணிய வேண்டும், கையில் லத்தி போன்றவற்றை பயன்படுத்த கூடாது, காவல்துறையின் நிபந்தனைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என கூறி தமிழகத்தில் நவம்பர் 6 அல்லது 13 ம் தேதி நடத்தி கொள்ள அனுமதி வழங்குவதாக உத்தரவிட்டார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.