நாம் நினைத்திருந்தால் ஜெயலலிதா முதல்வர் அல்ல என அறிவித்திருக்க முடியும்” மோடி பரபரப்பு பேச்சு!முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அமித்ஷாவிடம் கூறிய சில விஷயங்களை பா.ஜ.க. தலைவர் ஒருவர் தங்களிடம் தெரிவித்ததாக விகடனில் கூறப்பட்டுள்ளது. அந்த விபரங்களை அப்படியே தருகிறோம். எனவே இந்த செய்தி பற்றிய பொறுப்பை லைவ் டே முற்றிலுமாக துறக்கிறது.

” நாம் ( பா.ஜ.க ) நினைத்திருந்தால், ‘ ஜெயலலிதா முதல்வர் அல்ல’ என்பதை அறிவித்திருக்கலாம். அவர் மக்கள் செல்வாக்குமிகுந்த பெண்மணியாக இருக்கிறார். தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தில் தேசிய எண்ணம் கொண்ட தலைவராக இருக்கிறார். அவரை நாம் சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம். இந்த விவகாரத்தில் நாம் நல்லபடியாகவே செயல்பட்டிருக்கலாம். கட்சியின் சீனியர் அவசரப்பட்டு ட்விட்டரில் தகவல் வெளியிட்டது எதிர்மறையாக மாறிவிட்டது. அதனால்தான், ‘ ஆட்சிக்கலைப்பு என்பதெல்லாம் இல்லை’ என்று தமிழ்நாட்டுத் தலைவர்களிடம் பேசச் சொன்னேன். நாளை அவர் குணமாகி வந்தாலும், நமக்கு உதவியாக இருப்பார். அதுவரையில் நடக்கின்ற அனைத்தையும் கவனிப்போம். அ.தி.மு.கவை உடைக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு இல்லை. காங்கிரஸ்காரர்கள்தான், கட்சி உடையுமா எனக் காத்திருப்பார்கள்.

என்னுடைய ஆதரவு இல்லாமல், முதல்வராக அவர் தொடர முடியாது என்பதும் அங்குள்ளவர்களுக்குத் தெரியும். நாம் கைவிட்டிருந்தால், எம்.எல்.ஏக்களுக்கும் முதல்வருக்கும் உள்ள வித்தியாசம் வெளி உலகுக்குத் தெரிந்திருக்கும். அவருக்கு கௌரவக் குறைச்சல் வந்துவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு செய்தோம். இப்போது வரையில் ஜெயலலிதா உடல்நிலை சஸ்பென்சாகவே இருக்கிறது. அப்படியே அவர் குணமாகி வந்தாலும் ஆக்டிவாக செயல்பட முடியாது. அவர் முதலமைச்சராக தொடர வேண்டும் என்றால், நம்முடைய ஆதரவு அவருக்குத் தேவை. நாம் அவருக்குச் செய்த உதவியை மறக்க மாட்டார். சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்ட பிறகுதான், அ.தி.மு.கவில் நம்முடைய எதிரி யார்? நண்பர் யார் என்பதையே அறிந்து கொள்ள முடிந்தது’ என விரிவாகவே பேசியிருக்கிறார்”… இவ்வாறு விகடனில் செய்தி வெளியாகியுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.