அதிரையில் மத்திய பாஜக அரசைக்கண்டித்து ஆர்ப்பாட்டம்: எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி பங்கேற்கிறார் அனைவரும் திரண்டு வாரீர் -ம ஜ க .இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையில் பொது சிவில் சட்டம் கொண்டு வர முனைப்பு காட்டும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம், அதிராம்பட்டினம் கிளை சார்பில் எதிர்வரும் ( 28-10-2016 ) வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொதுச்செயலரும், நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம். தமீமுன் அன்சாரி எம்எல்.ஏ கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்த உள்ளார். இதில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு மஜக அதிராம்பட்டினம் கிளை சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.