முத்துப்பேட்டை அருகே கூலிபடை கும்பல் போலிசார் அதிரடி சோதனை! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்முத்துப்பேட்டை அருகே கூலிபடைக்கும்பல் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து சென்னையிலிருந்து வந்த தனிப்படை போலிசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் கார் மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்செய்யப்பட்டன.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூரை சேர்ந்தவர் வீரபாண்டியன். கடந்த வருடம் ஆகஸ்ட் 7ம் தேதியன்று முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டார். வழக்கு சம்பந்தமாக சிலர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து கடந்த வருடம் டிசம்பர் 25ம் தேதியன்று அதே பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் மதனும் முன்விரோதம் தொடர்பாக ஒரு கும்பலால் படுகொலை செய்யபட்டார். கொலை தொடர்பாக பத்துக்கும்
மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அடுத்தடுத்த கொலை சம்பவங்களால் கோவிலூரில் பதற்றம் தொடர்ந்தது. இதனையடுத்து பழிக்குபழியாக குற்றச்சம்பவங்கள் தொடராமல் தடுத்திட அப்பகுதியில் போலீசார் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆனாலும் போலிசாரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு கூலிப்படையினர் ஊடுறுவலும் தொடர்ந்தது. இதனால் உயரதிகாரிகள் அதிருப்தியிலிருந்தாக தெரிகிறது.

இந்நிலையில் திருச்சி திருவானைக்காவலை சேர்ந்த சுந்தரபாண்டியன் மீது குற்றவழக்குகள் பல பதிவுசெய்யபட்டுள்ளன. அதனால் பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்டு வந்த சுந்தரபாண்டியன் உட்பட சிலர் கோவிலூரில் பதுங்கியுள்ளதாக உயரதிகாரிகளுக்கு தகவல்கிடைத்தது. இதனையடுத்து சென்னையை சேர்ந்த தனிப்படை போலிசார்  இன்ஸ்பெக்டர் கோடிலிங்கம் தலைமையில் நேற்று அதிகாலை கோவிலூர் வந்தனர்.

அங்கு பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். போலிசாரை கண்டதும் நாய்கள் பலமாக குரைக்க ஆரம்பித்தன. போலிசார் வருகையைறிந்து உஷாரான சுந்தரபாண்டியன் தரப்பினர் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றமடைந்த தனிப்படை போலிசார் கூலிப்படையினர் பயன்படுத்திய கார் ஒன்றையும் ஏராளமான அரிவாள் மற்றும் ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக அதே பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலரிடம்
போலிஸ் டி.எஸ்.பி (பொ) தினகரன், இன்ஸ்பெக்டர் (பொ) ஜோதி முத்துராமலிங்கம் மற்றும் தனிப்படை போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் முத்துப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கண்காணிப்பு வளையத்துக்குள் முத்துப்பேட்டை மற்றும் கோவிலூர் கொண்டுவரப்பட்டுள்ளதாக போலிசார் தரப்பில் தெரிவித்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.