பா.ஜ.க. இந்த நாட்டை அழித்துவிடும்: அரவிந்த் கேஜ்ரிவால்பாகிஸ்தான் நடிகர்கள் நடித்த படங்களை இந்தியாவில் திரையிடுவது குறித்து எழுந்த சர்ச்சையில் மகாராஷ்டிரா பா.ஜ.க அரசு நடந்துகொண்ட விதம் குறித்து கருத்து தெரிவித்த டில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், “பா.ஜ.க. இந்நாட்டை சீரழித்துவிடும்” என்று கூறியுள்ளார்.
சிவ சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்காரே, பாகிஸ்தான் நடிகர்களை தங்கள் படங்களில் நடிக்க வைத்த திரைப்பட தயாரிப்பாளர்கள் இராணுவ நிதிக்கு 5  கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என்று கூறினார். அப்படி இல்லையென்றால் அவர்களின் படங்கள் திரையிடப்படும் திரையரங்குகளில் பிரச்சனைகள் ஏற்ப்படும் என்று மிரட்டியுள்ளார்.

இந்த பிரச்னையை ஒட்டி திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் சிவ சேனா கட்சியினருக்கு இடையேயான பேச்சுவார்த்தையை மகாராஷ்டிரா முதல் தேவேந்திர பட்னாவிஸ் நடத்திவைத்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் கேஜ்ரிவால் இப்படி ஒரு கருத்தை கூறியுள்ளார்.
இராணுவத்திற்காக சிவ சேனா வழங்கும்படி கூறிய நிதியை இராணுவம் பெற மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.