முஸ்லிம் மாணவரை ஏமாற்றி 'சாகா' பயிற்சியில் ஈடுபடுத்திய 'ஆர்எஸ்எஸ்'ஏண்டா நாதாரிகள உங்களுக்கு அழிவு நெருங்கிவிட்டது....

'கல்வி சுற்றுலா' என்ற பெயரில் கபட நாடகம்..!

'குல்ஜார் அஹ்மத்' என்ற பெயரை 'விஜயகுமார்' என மாற்றி ஆள்மாறாட்டம்..!!  
 
உத்தரப்பிரதேசத்தின் 'சித்தார்த்' நகரை சேர்ந்த 'குல்சார் அஹ்மத்' என்ற 8-ம் வகுப்பு மாணவரை 'கல்வி சுற்றுலா' என்ற பெயரில் கட்டாயப்படுத்தி அழைத்து சென்று 'ஆர்எஸ்எஸ்'-ன் 'Prathmik Prashikshan Varg' என்ற பயிற்சியில் ஈடுபடுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

'பத்னி' என்ற இடத்தில் அக்டோபர் 10 முதல் 18 வரை நடந்த இந்த முகாமில், குல்சார் அஹ்மதின் பெயரை 'விஜயகுமார்' என ஆள்மாறாட்டம் செய்து பயிற்சி அளித்துள்ளது,பள்ளி நிர்வாகம்.

பயிற்சியின்போது, முஸ்லிம்களின் மீது மாணவர்களுக்கு கோபமேற்படும் வகையில் பல்வேறு அவதூறான செய்திகளை கூறி வெறி ஏற்றியுள்ளனர்.

15 வயதுடைய சிந்திக்கும் திறனுடைய மாணவன் குல்சார், முஸ்லிம் விரோத துவேஷ கருத்துக்களை எதிர்த்து பேசமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

8 நாட்களும் முஸ்லிம் விரோத ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் கேட்டு மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார், மாணவர் குல்சார்.

ஊர் திரும்பியதும் தனது தந்தை மகபூப் அஹ்மதிடம் விஷயத்தை எடுத்து சொல்லவே, தற்போது பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப்பதியும் சூழல் உருவாகி வருகிறது.

இவ்விஷயம் பத்திரிக்கையாளர்கள் சிலருக்கும் தெரிந்து விட, பலரும் மாணவன் குல்சார் அஹ்மதிடம் தொலைபேசி வழியாக பேட்டி எடுத்து வருகின்றனர்.

இந்த முகாமில் குல்சார் தவிர 'நூர் ஆலம்' உள்ளிட்ட வேறு சில முஸ்லிம் மாணவர்களும் அழைத்து செல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.