பிஜேபி யில் இருந்து மாவட்ட சிறுபான்மை அணித்தலைவர் தெளலத் ( எ ) தாவூது விலகல் !நாடு முழுவதும்  இஸ்லாத்திற்கும் முஸ்லீம்களுக்கும் விரோதமான முடிவுகளையெடுக்கும் சங் பரிவாரங்கள் அரசியல் கட்சியான  பிஜேபி இல்  சில பேர் தங்கி முஸ்லிம்கள்  அங்கம் வகிக்கிறார்கள்.

அதுபோல் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் தெளலத் ( எ ) தாவூது. இவர் பாரதிய ஜனதா கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை அணித்தலைவராக பொறுப்பில் இருந்தார்.

இந்நிலையில் 'இஸ்லாமிய ஷரியத் சட்டத்தில் கைவைக்க நினைக்கும் பிஜேபி கட்சியின் போக்கு தமக்கு பிடிக்கவில்லை' எனக்கூறி அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட தான் வகித்து வரும் பொறுப்பிலிருந்து விலகி உள்ளதாக இன்று தெளலத் ( எ ) தாவூது அறிவித்துள்ளார். இதுதொடர்பாக கட்சி நிர்வாகியை சந்தித்து தமது விலகலை தெரிவித்துள்ளதாக கூறினார்.

இவரது விலகல் உறுதி என்றால் நமது சமுதாயத்தினர் அனைவரும் சந்தோசப்படுவம் என்பதே உண்மை....

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.