முத்துப்பேட்டை நகர மாணவர் இந்தியா (தமுமுக) சார்பாக சிவில் சட்டத்திற்கு எதிரான கருத்தரங்கு கூட்டம் - படங்கள் இணைப்பு



அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

முத்துப்பேட்டை நகர மாணவர் இந்தியா (தமுமுக) சார்பாக இன்று 29-10-2016 சிவில் சட்டத்திற்கு எதிரான கருத்தரங்கு கூட்டம் முஹைதீன் பள்ளிவாசல் வளாகத்தில் காலை 10 மணியளவில்
நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அண்ணன் ப. அப்துல் சமது அவர்கள் கலந்து கொண்டு பொது சிவில் சட்டம் எத்தகைய தாக்கத்தை முஸ்லிம் சமுதாய மக்களுக்கு ஏற்படுத்தும் என்று சீரிய முறையில் விளக்கி விளக்க உரை நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட செயலாளர் E.பஜிலுல் ஹக், மமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் L.தீன் முஹம்மது , ஒன்றிய செயலாளர் நெய்னாமுகமது தமுமுக நகர செயலாளர் சம்சூதீன் மமக நகர செயலாளர் காமிம் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள், ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர். மற்றும் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் ராஜ் முகமது, பாசில், நபிக் மற்றும் தாஜிதீன் உள்ளிட்டவர்களும் கலந்துக்கொண்டனர்.









தகவல் மற்றும் ஊடக பிரிவு,
தமுமுக மற்றம் மமக
திருவாரூர் மாவட்டம்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.