தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் உயர்மட்ட குழு அவசர ஆலோசனை க்கூட்டம்
தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை உயர்மட்ட குழுவின் அவசர ஆலோசனை க்கூட்டம் மதுரையில் புதிதாக கட்டப்பட்டுவரும் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைமையகத்தில் 22-10-16 சனிக்கிழமை அன்று மாநில தலைவர் மவ்லானா மவ்லவி ஷைகுல் ஹதீஸ் A.E.M.அப்துற்றஹ்மான் ஹள்ரத் தலைமையில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் நம்முடைய உயிறினும் மேலான ஷரீயத் சட்டத்தின் உரிமையாக இருக்ககூடிய முஸ்லீம் தனியார் சட்டத்திற்கு எதிராகவும்,பல சமூகத்தினர்கள் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழக்கூடிய நம்முடைய இந்திய நாட்டின் ஒற்றுமைக்கும்,அமைதிக்கும் எதிராக உள்ள பொதுசிவில் சட்டத்தை நடைமுறைபடுத்த முற்சிக்கும் மத்திய அரசுக்கு நம்முடைய எதிர்பை தெரிவிக்கும்முகமாகவும், முஸ்லீம் தனியார் சட்டம் ஆண்,பெண் இருசாராருக்கும் பாதுக்காப்பாகவே உள்ளது என்ற நம்முடைய நிலைபாட்டைதெரிவிக்கும் முகமாக ஆல் இந்தியா முஸ்லீம் பர்சல் லா போர்டின் வழிகாட்டுதலின் படி தமிழகமுழுதும் கையெழுத்து இயகத்தை நடத்துவது,


மேலும் நீதி மன்றத்தின் உத்தரவின் படி காவேரி மேலான்மை குழு அமைக்க மத்திய அரசை வலியுறுத்துதல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.