அதிரை இளைஞர்களை பலி தீர்த்த உள்ளூர் புதுக்கோட்டைவாசிகள்! அதிர்ச்சி தகவல்!
திருச்சியிலிருந்து அதிரை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த ஹாஜாமுகைதீன் மற்றும் நாஷிக் ஆகியோர் உள்ளூர் புதுக்கோட்டை அருகே வந்தபொழுது எதிர்பாராத விதமாக சைக்களில் வந்த முதியவர் மீது மோதியுள்ளனர். இதில் ஹாஜாமுகைதீனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சைக்களில் வந்த முதியவர் மற்றும் பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த நாஷிக் ஆகியோருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் சம்பவ இடத்தில் ஒன்றுகூடிய உள்ளூர் புதுக்கோட்டைவாசிகள் முதியவரை மட்டும் மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். மேலும் காயமடைந்து கிடந்த அதிரை இளைஞர்கள் இரண்டு பேரையும் குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை சொல்லி ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியத்துடன் அவர்களை அடிக்கவும் பாய்ந்துள்ளனர், மேலும் காயமடைந்தவர்களை மீட்கசென்ற அதிரை தமுமுக ஆம்புலன்ஸையும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது இவைகள் அனைத்தும் காவல்துறை அதிகாரிகளின் கண்முன்னே நடந்துள்ளது. மேலும் காயமடைந்த நாஷிக் ஆலிம் பட்டம் பெற மதரஸாவில் தங்கிபடிக்கும் மாணவர் என்பதால் விபத்து ஏற்பட்ட நேரத்தில் ஜிப்பா அணிந்திருந்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.