கிடைத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்திய தமீம் அன்சாரி முகம் சிவந்த பாண்டே .வாய்ப்புகளை நழுவ விடக்கூடாது
தமீம் அன்சாரி மட்டுமல்ல  தவ்ஹீத் ஜமாத்தும்  தான்

முன்பெல்லாம் தொலைக்காட்சியில் தீபாவளி நிகழ்ச்சி என்றால் அரட்டை அரங்கம், பட்டி மன்றம், புது சினிமா, நடிகை நடிகைகள் பேட்டி, ஆட்டம் பாட்டம் கும்மாளம் இவைகள் தான் முதன்மை வரிசையில் இருக்கும்...

ஆனால் இந்த வருடம் தீபாவளிக்கு சற்றும் சம்மந்தமே இல்லாத ஒரு நிகழ்ச்சி தமிழக மக்களை பெரும் பரபரப்பாக பேச வைத்து இருக்கிறது.

அதுதான் தந்தி டிவி யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட தலாக்கு பிரச்சினையும் பொதுசிவில் சட்டம் தேவையா திணிப்பா என்கிற தலைப்பு தான் அதற்கு காரணம்.

தீபாளிக்கும் இந்த தலைப்பிற்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கிறதா? இது முஸ்லிம்கள் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஆயிற்றே ஏன் இந்த நிகழ்ச்சிக்கு தீபாவளி அன்று இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என எந்த கோணத்தில் சிந்தித்து பார்த்தாலும் குழப்பமாகவே இருக்கும்.

இது தான் பாண்டே அவர்களின் பாஸிச தந்திரம். தீபாவளி அன்று முக்கால்வாசி பேர் தொலைக்காட்சியில் தான் நேரத்தை போக்குவர்.

இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களையும் இஸ்லாமிய சட்டத்தை பற்றிய தவறான தகவல்களையும் இலகுவாக மக்கள் மனதில் திணித்து விட எண்ணிய பாண்டே இந்த தீபாவளி அன்று இந்த தலைப்பை தேர்வு செய்து களமாட நினைத்தார்.

முதலில் இந்த நிகழ்ச்சிக்காக முஸ்லிம்கள் தரப்பிலிருந்து பேச ஆளூர் ஷாநவாஸை முடிவு செய்த பாண்டே, ஷாநவாஸ் அடிக்கடி விவாதங்களில் பங்கேற்பவர் என்பதால் அவரும் சரியாக பதிலடி கொடுத்து விடுவார் ஆகையால் மக்களிடம் பரிச்சையமானா ஆளாகவும் இருக்க வேண்டும் ஆனால் அதிகமான டிவி விவாதங்களில் பங்கேற்காத நபராக இருக்க வேண்டும் என முடிவுசெய்து நாகை தொகுதி MLA தமீம் அன்சாரி தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் சகோ அன்சாரி அவர்களும் கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி கொண்டார். இது பாண்டேவிற்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது.

சகோ பிஜே அவர்கள் 2003 ல் பேசிய பொதுசிவில் சட்டம் சாத்தியமா என்கிற உரை பெரிதாக உதவி இருக்கிறது சகோ அன்சாரி அவர்களுக்கு.

பிஜே உரையின் சாராம்சமும் பிஜே எழுதிய பொதுசிவில் சட்டம் என்கிற நூலின் கருத்தாக்கமும் அதிகமாகவே பிரதிபலித்தது அன்சாரியின் பேச்சில்.

கடந்த வாரங்களில் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வாதவிவாதங்களில் நிறைய இஸ்லாமியர்கள் பங்கேற்று பொதுசிவில் சட்டம் குறித்து  சொதப்பியதை தூக்கி நிறுத்தி இருக்கிறார் அன்சாரி.

"தலாக்கு சொல்லும்போது அல்லாஹ்வின் அர்ஸ் நடுங்குகிறது" போன்ற  பலவீனமான ஹதீஸ்களை சுட்டிக்காட்டியதை தவிர்த்து அன்சாரியின் உரை பொதுசிவில் சட்டத்திற்கு பலத்த எதிர்ப்பாக அமைந்தது என்பதில் மாற்று கருத்து இல்லை.

இதுபோன்ற காட்சி ஊடகங்களில் நம் கருத்துக்களை எத்தி வைக்கின்ற சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது அதை மிகச்சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

அதை லாவகமாக கையாண்டிருக்கிறார் சகோ தமீம் அன்சாரி. அவருக்காக துஆ செய்வோம்.

எந்த சந்தர்ப்பத்தையும் தவ்ஹீத் ஜமாஅத் நழுவ விட்டதில்லை இந்த சந்தர்ப்பத்தையும் தான்.

எங்கும் அழைப்புப்பணி எதிலும் அழைப்புப்பணி இங்கும் அழைப்புப்பணி இந்த மேடையிலும் அழைப்புப்பணி.

ஆம் மதுரையில் நடந்த இந்த நிகழ்ச்சியை சரியாக பயன்படுத்தி கொண்டது MLA அன்சாரி மட்டும்  அல்ல தவ்ஹீத் ஜமாஅத்தும் தான்.

கிடைக்கக் கூடிய சந்தர்ப்பம் சிறியதாக இருந்தாலும் கூட அதையும் பயனுள்ள வகையில் அழைப்புப்பணியின் ஒரு அம்சமாக பயன்படுத்திக் கொள்வதில் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுடன் யாரும் போட்டி போடுவது கடினம் என்றுதான் சொல்ல வேண்டும்.

தங்களுக்கு கிடைக்கும் அத்துனை வாய்ப்புகளையும் சிறந்த தாவா களமாக தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மாற்றி வருகின்றனர்.

இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது என அவதூறு சொல்பவர்களுக்கு சத்தியக் கருத்துக்களை கொண்டு செல்லும் விதமாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் அண்ணா நகர் கிளை சார்பாக சகோதரர் பீஜே அவர்கள் எழுதிய, “இஸ்லாம் பெண்களின் உரிமைகளை பறிக்கின்றதா?” என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

 ரங்கராஜ் பாண்டே, பாஜக முன்னாள் மாநில தலைவர் CP ராதா கிருஷ்ணன், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சார்ந்த ஆசிர்வாதம் ஆச்சாரியா, காங்கிரஸைச் சேர்ந்த சுதர்சன் நாச்சியப்பன், வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், பாதிரியார் ஜெகத் கஸ்பர் ஆகியோருக்கும் இந்த நூல்களை தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்ட நிர்வாகி சுப்ரமணியபுரம் நாசர் தலைமையில் அண்ணா நகர் கிளை நிர்வாகிகள் வழங்கினர்.

நூலை பெற்றுக் கொண்ட பாஜகவின் முன்னாள் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் இந்த புத்தகத்தில் பீஜே அவர்கள் எழுதியுள்ள கருத்துக்களைப் படித்துவிட்டு இதில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு கண்டிப்பாக தொடர்பு கொள்வேன் என்று கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்.ஸைச் சேர்ந்த ஆசிர்வாதம் ஆச்சாரியாவிடம் இந்த நூல்களை அன்பளிப்பாக வழங்கிய போது, அதை பெற்றுக் கொண்ட அவர், “இந்த புத்தகம் முன்னரே எனக்குக் கிடைத்திருந்தால் இந்நிகழ்ச்சியில் பேசுவதற்கு கூடுதலாக செய்திகளை அறிந்து கொண்டிருந்திருப்பேன்; அருமையான தலைப்பிலான புத்தகம் இது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

 ரங்கராஜ் பாண்டே விடம் இந்த நூலை அன்பளிப்புச் செய்த போது புன்முறுவலுடன் பீஜே எழுதிய புத்தகமா எனக்கேட்டு அதைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

மேடையை விட்டு இறங்கி வந்த சகோ தமீம் அன்சாரியிடம் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் இந்த புத்தகத்தை கொடுத்த போது நான் இன்று பேசிய அனைத்துமே சகோ பிஜே அவர்களின் குறிப்பு தான். இந்த புத்தகமும் பெரும் உதவியாக இருந்தது என்று சொல்லி இருக்கிறார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்வையாளர்கள் அனைவருக்கும் இதே தலைப்பிலான புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தி டிவி நடத்திய நிகழ்ச்சியில் இஸ்லாத்தின் சத்தியக் கருத்துக்களை முத்திரை பதித்த தவ்ஹீத் ஜமாஅத்தின் அழைப்புப்பணி இன்னும் வீரியம் பெற வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

கூத்தாநல்லூர் ஜின்னா
Share on Google Plus

1 comments:

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.