முத்துப்பேட்டை காவல்துறையை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்புபுகார்மீது நடவடிக்கை எடுக்காத முத்துப்பேட்டை காவல்நிலையத்தை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் வக்கீல்கள் நேற்று கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வக்கீல்கள் சங்க கூட்டம் திருத்துறைப்பூண்டியில் நேற்று நடைபெற்றது. தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். கூட்டத்தில், சங்க உறுப்பினர் அஷ்ரப்அலி முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் கொடுத்த புகாரில் முத்துப்பேட்டை போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பொறுப்பு ஆய்வாளர் அலட்சிய போக்கை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் உள்ள உரிமையியல், குற்றவியல், விரைவு ஆகிய 3 நீதிமன்றங்களை புறக்கணிப்பு செய்வது, வக்கீல் அஷ்ரப்அலி கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட நபரை ஒரு நாள் கால அவகாசத்திற்குள் கைது செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் வருகிற 20ம் தேதி  இன்று முத்துப்பேட்டை காவல்துறையை கண்டித்து முத்துப்பேட்டை காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தீர்மான அடிப்படையின் பேரில் நேற்று நீதிமன்றங்களை வக்கீல்கள்
புறக்கணிப்பு செய்தனர். இதனால் கோர்ட் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. கூட்டத்தில் செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் லெனின் மற்றும் முன்னாள் நிர்வாகிகள், மூத்த வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.