அப்பல்லோவில் திடீர் பரபரப்பு குவிந்த அமைச்சர்கள் .. டிஜிபி, போலீஸ் கமிஷனருடன் அவசர ஆலோசனை!தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர்கள் அவசரமாகக் கூடி சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள்.

10வது நாளான நேற்று மாலை தமிழக ஆளுநர் வித்தியாசாகர் ராவ் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று முதல்வருக்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் பேசிவிட்டு சென்றார்.

இந்நிலையில், 11வது நாளான இன்று தமிழக அமைச்சர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அப்போலோ மருத்துவமனைக்கு அவசரமாக விரைந்து வந்தனர். ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, சிவிசண்முகம், எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன் உள்பட அனைத்து அமைச்சர்களும் வந்தனர். அதேபோல டிஜிபி ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும வந்தனர். அங்கு வைத்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது. அந்த ஆலோசனைக்குப் பின்னர் அனைவரும் அங்கிருந்து வெளியேறினர். பத்திரிகையாளர்கள் அவர்களிடம் என்ன ஏது என்று கேட்டபோது யாரும் பதிலளிக்கவில்லை.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி உடல்நலக்குறைவின் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை நிர்வாகம் இதுவரை 4 செய்திக் குறிப்புகளை வெளியிட்டு ஜெயலலிதா நன்றாக இருப்பதாகவும் வழக்கமான உணவு உட்கொள்வதாகவும் கூறி வருகிறது. என்றாலும் அவர் தொடர்ச்சியாக மருத்துவமனையிலேயே இருக்கிறார்.'

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.