வங்கிகளுக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை: பண பரிவர்த்தனைகள் பாதிப்பு..!தமிழகத்தில் வங்கிகளுக்கு அக்டோபர் 8 முதல் 12 ஆம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை வருவதால் வாடிக்கையாளர்களின் வங்கி சேவைகள் பாதிக்க வாய்ப்புள்ளது.

வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையும், நான்காவது சனிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 8 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்றாதல் விடுமுறை.

அடுத்து அக்டோபர் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. அக்டோபர் 10 திங்கட்கிழமை ஆயூத் பூஜை விடுமுறை, அக்டோபர் 11 செவ்வாய்க்கிழமை விஜயதசமி விடுமுறை, அக்டோபர் 12 புதன்கிழமை மொஹரம் விடுமுறை என விடுமுறை நாட்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து நாட்கள் தொடர்ந்து விடுமுறை ஏற்படுவத்தால் வாடிக்கையாளர்கள் முன் கூட்டியே பண பரிவர்த்தனைகளை செய்து கொள்ளுமாறு வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுருத்தி உள்ளன. மேலும் ஏடிஎம்களிலும் பணத்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.