ஒட்டகம் கடித்து துண்டான விரல் மீண்டும் பொருத்தப்பட்டது !அபுதாபி எமிரேட்டின் பாலைவனச் சோலை (Oasis) நகரான அல் அய்னில் ஒட்டகம் ஒன்று தீவனம் ஊட்டிய 26 வயது நபரின் நடுவிரலை கடித்து துப்பியது. எனினும் அவர் விரைவாக அல் தவாம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட. அங்கு மைக்ரோ சர்ஜரி அடிப்படையில் மீண்டும் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இன்னும் 4 வாரங்களில் கடிபட்ட விரல் பழையபடி இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அல் தவாம் மருத்துவமனையின் பிலாஸ்டிக் சர்ஜரி ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் அம்மார் அல் தாமின் கூறுகையில், இது போன்ற ஒட்டகக்கடி சம்பவங்கள் அடிக்கடி நிகழும் ஒன்று தான் என்றாலும் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வருவதன் மூலம் உரிய சிகிச்சையளிக்க முடியும். மேலும், ஒட்டகங்கள் இனச்சேர்க்கை தேவைப்படும் காலங்களிலேயே இதுபோல் மூர்க்கமாக நடந்து கொள்கின்றன எனவும் தெரிவித்தார்.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.