பர்தா (புர்க்க) அணிந்து சென்ற அகமது கபீர் சிக்கினார். இது தேவையா? ஊடகங்களின் வதந்தியை பாருங்கள்கேடு  கெட்ட  செயல் செய்வதற்கு " பர்தா (புர்க்க)" வை கேவலப்படுத்தலாமா ...  நமது சமுதாயத்தினருக்கு இது தேவைதானா 
ஊடக  காரனுக்கு இந்த ஒரு நியூஸ் போதும்  எப்படியெல்லாம் திரித்து மறைத்து  பரப்புவார்கள் என்பதை நாம் அறியவேண்டாமா எதோ சில பெயர் தாங்கி  முஸ்லிம்கள் இது போன்ற ஈன செயல்களில் ஈடுபடுவதை ஒட்டுமொத்த நம்  சமுதாயத்தையும்  கேவலமாக சித்தரித்து பரப்பி விடுவார்கள் நாம்தான்   விழிப்புணருடன்  இருக்க வேண்டும் .....  - முத்துப்பேட்டை மீடியா  

 எப்படி எல்லாம் செய்தி வெளியிடுகிறார்கள் என்று பாருங்கள்.........

தினத்தந்தி. தினகரன் இரண்டு செய்தித்தாள் களுக்கும்  உள்ள வித்தியாசத்தை பாருங்கள் -  சம்பவம் இரண்டும்  ஒன்றே  

முகநூல்’ தோழியை சந்திக்க வந்த என்ஜினீயர் பர்தா அணிந்து சென்றபோது சிக்கினார் - தினத்தந்தி  

ஈரோடு அருகே ‘முகநூல்’ தோழியை சந்திக்க பர்தா அணிந்து சென்ற என்ஜினீயரை, பயங்கரவாதி என நினைத்து பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

ஐ.எஸ். தீவிரவாதி
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி மெயின் ரோட்டில் நேற்று மாலை பர்தா அணிந்து கொண்டு ஒருவர் செல்போனில் பேசியபடி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சிலர் பர்தா அணிந்திருப்பவர் ஆண் குரலில் பேசுகிறாரே என்று சந்தேகம் அடைந்தனர்.

ஒரு வேளை ஐ.எஸ். தீவிரவாதி யாராவது இந்த பகுதியில் நாசவேலை செய்ய இங்கு வந்திருக்கிறாரோ என்று சந்தேகம் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு ஏற்பட்டது. உடனே அவர்கள் அந்த நபரை பிடித்து கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

முகநூல் தோழி

விசாரணையில், ‘அவர் கும்பகோணம் பகுதியை சேர்ந்த அகமது கபீர் (வயது 25) என்ஜினீயர் என்பதும், அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும் தெரிய வந்தது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இவரும், ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த 29 வயது பெண் ஒருவரும் முகநூல் மூலம் அறிமுகமாகினர். இதைத்தொடர்ந்து 2 பேரும் தங்கள் நட்பை முகநூல் மூலம் தினமும் வளர்த்துக்கொண்டனர். மேலும் அந்த பெண் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று அவரிடம் கூறி உள்ளார்.

இந்த நிலையில் பவானியில் உள்ள தன்னுடைய முகநூல் தோழியை பார்க்க கும்பகோணத்தில் இருந்து அகமது கபீர் நேற்று காலை புறப்பட்டார். இதுகுறித்து அவர் தன் முகநூல் தோழியிடம் செல்போன் மூலம் தெரிவித்தார். உடனே அகமது கபீரிடம் அந்த பெண் கூறுகையில், ‘தன்னை பார்க்க பவானி வரவேண்டாம். கவுந்தப்பாடியில் உள்ள தன்னுடைய பாட்டி வீட்டுக்கு வரவேண்டும்’ என்று கூறினார்.

பர்தா அணிந்து கொண்டு...

இதைத்தொடர்ந்து அவர் கவுந்தப்பாடி வந்து, தன்னுடைய முகநூல் தோழியின் வீட்டுக்கு சென்றார். அங்கு சிறிது நேரம் அவரிடம் பேசிவிட்டு கும்பகோணம் செல்வதற்காக அங்கிருந்து அகமது கபீர் புறப்பட்டார். அப்போது வீட்டின் அருகில் ஏராளமான ஆட்கள் நின்று பேசிக்கொண்டு இருந்ததால் அகமது கபீரை அங்கிருந்து அந்த பெண் அனுப்ப தயங்கினார்.

பின்னர் அந்த பெண் தன்னிடம் இருந்த பர்தாவை அகமது கபீரிடம் கொடுத்து இதை அணிந்து கொண்டு கவுந்தப்பாடி பஸ் நிலையத்துக்கு செல்லுங்கள் என்று கூறினார். இதைத்தொடர்ந்து பர்தாவை அணிந்து கொண்டு அகமது கபீர் சென்று உள்ளார்.

திருமணம் ஆனவர்
ஆனால் அவர் பஸ் நிலையத்துக்கு செல்லும் வழி தெரியாமல் வழிதவறி சென்று விட்டார். இதனால் அவர் செல்போன் மூலம் தன் முகநூல் தோழியை தொடர்பு கொண்டு வழி தவறி சென்றுவிட்டது குறித்து தெரிவித்தார். பர்தா அணிந்து கொண்டு ஆண் குரலில் பேசியதால் சந்தேகம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஐ.எஸ். தீவிரவாதி என நினைத்து அவரை பிடித்துள்ளனர்’ மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், ‘அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பதும், இதை மறைத்து தனக்கு திருமணம் ஆகவில்லை என கூறி அகமது கபீரை ஏமாற்றி கவுந்தப்பாடிக்கு வர சொல்லியதும்’ தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அகமது கபீரை, கவுந்தப்பாடி போலீசார் எச்சரித்து கும்பகோணத்துக்கு அனுப்பிவைத்தனர்.
                                                                                                         இது  தினத்தந்தி செய்தி

பேஸ்புக் தோழியை சந்திக்க பர்தா அணிந்து வந்த வாலிபர் சிக்கினார் -
தினகரன்                                             

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் நேற்று மதியம் பர்தா அணிந்தபடி சென்றவரின் மீது நடவடிக்கையில் சந்தேகப்பட்ட பொதுமக்கள் அந்த நபரை பின் தொடர்ந்து சென்றனர். சிறிது தூரம் சென்றதும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அவர் பர்தாவை கழற்றியபோது அது பெண் அல்ல, ஆண் என்பது தெரியவந்தது. அவரை பிடித்து கவுந்தப்பாடி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர் கும்பகோணத்தை சேர்ந்த அகமதுகபீர்(25) என்றும் பேஸ்புக்கில் பவானியை சேர்ந்த இளம்பெண்ணிடம் பழகி வந்துள்ளார். அவரை சந்திப்பதற்காக கவுந்தப்பாடிக்கு பர்தா அணிந்து வந்தபோதுதான் பொதுமக்களிடம் சிக்கி உள்ளார். அந்த பெண்ணையும் போலீசார் அழைத்து விசாரித்து பின் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
                                                                                            இது  தினகரன் செய்தி Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.