துபாயில் மேலும் ஒரு உலகின் பெரிய கோபுரம் கட்டும் பணி துவங்கியது !துபையில் புருஜ் கலீபா எனும் பெயரில் 828 மீட்டர் (2700 அடி) உயரத்தில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது அறிந்ததே, இதை விட உயரமான கட்டிடம் ஒன்றை 1000 மீட்டர் உயரத்தில் அமைக்கும் பணி சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் நடைபெற்று வருகிறது.

தற்போது அகலம் குறைந்த மினாரா வடிவ உலகின் மிகப் பெரிய கோபுரம் ஒன்றை அமைக்கும் பணியில் துபையின் தனியார் நிறுவனம் ஒன்று ஈடுபட்டுள்ளது. சுமார் 1 பில்லியன் டாலர் (900 பில்லியன் யூரோ) செலவில் அமைக்கப்படவுள்ள இந்தக் கோபுரத்தின் உயரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

துபை கீரிக் ஹர்பர் (Dubai Creek Harbour) எனும் 6 சதுர கி.மீ துபை விரிவாக்கப்பகுதியில் ஏற்கனவே இதே தனியார் நிறுவனத்தால் புதிய கட்டிடப் பணிகள் ஏற்கனவே துவங்கியிருந்த நிலையில் தற்போது புதிய கோபுர அறிவிப்பால் சதுர அடி 2000 முதல் 2500 திர்ஹம் வரை அதிகரித்துள்ளது 'ஆதாயமில்லாமல் செட்டி ஆற்றில் இறங்க மாட்டார்;' என்ற பழமொழியை நினைவுபடுத்துவதாகவுள்ளது.

2020 ஆம் ஆண்டு துபையில் நடைபெறவுள்ள 'எக்ஸ்போ வர்த்தக கண்காட்சி' (Expo Dubai 2020) துவங்குமுன் திறக்கப்படவுள்ள இந்த கோபுரத்தில் ஹோட்டலுடன் சில வர்த்தக நிறுவனங்கள் இருந்தாலும் பொதுமக்கள் ஏறி பார்ப்பதற்கும் முக்கியத்துவம் தரப்பட உள்ளதாம்.
Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.