முத்துப்பேட்டையில் பரபரப்பு போலீஸ் குவிப்பு பா ஜ க வை சேர்ந்தவர் தூக்கிட்டு தற்கொலைமுத்துப்பேட்டை பேட்டை பகுதியை சேர்ந்த  பா ஜ க வை சேர்ந்த    சேகர் மகன் சிவா சங்கரன்    இன்று காலை  தற்கொலை செய்து கொண்டார்  இந்த சம்பவத்தால் முத்துப்பேட்டை நகர் முழுவது போலீஸ் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டது

தற்கொலை செய்து கொண்ட சிவா சங்கரனின் உடல் போலீசாரால் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி  அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.  இதன் காரணமாக  இன்று காலைமுதல் முத்துப்பேட்டை நகரில் பல வதந்திகளும்  பீதிகளும் தொடர்ந்தவண்ணம் இருந்தது  நகரின் எல்லா பகுதிகளிலும்
ஒரு டி ஐ ஜி  தலைமயில்  நான்கு எஸ் பி  மேற்பார்வையில் பல நூறு  போலீசார் குவிக்கப்பட்டு  ஏதும் அசம்பாவிதம் நடைபெறாமல்  பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்

நகரமே எதோ விநாயகர் ஊர்வலம் நடைபெறும்  அன்று இருப்பது போல் கட்சி அளித்தது

தற்கொலை செய்து கொண்ட இளைஞர் இந்த வருடம் விநாயகர் ஊர்வலம் நடைபெறும்பொழுது  எம் பி  அப்துல் ரஹ்மான்  அவர்களின் வீட்டில் கல் எறிந்த வழக்கிலும்  சென்ற மாதம்  கோவிலூரில் கிறிஸ்துவ பாதிரியார்கள் தாக்குதல் வழக்கிலும் தொடர்புடையவர்  என்று கூறப்படுகிறது  மேலும்  இவரும் மேலும் மூன்று நபர்களும்
நேற்று   ஜாமினில் வெளிவந்ததாக கூறப்படுகிறது

இவர் தற்கொலைக்கு காவல்துறையே கரணம் என்று சிவா சங்கரனின் மாமா முத்துப்பேட்டை  போலீசில் புகார் அளித்துள்ளார்

சற்றுமுன் அவரது உடல் பேட்டைக்கு கொண்டு செல்லும்போது எந்தவித அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்காக   திருத்துறைப்பூண்டியில் இருந்து முத்துப்பேட்டை பைபாஸ் செம்படவன் காடு வழியாக பேட்டை கொண்டுசென்று தகனம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது

அங்கங்கே குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார்  குறைக்கப்பபட்டு  ஊர் சகஜ நிலைமைக்கு திரும்பிக்கொண்டு இருக்கிறது .

மேலும் ஏதேனும் அசம்பாவிதம் நிகழாமல் இருப்பதற்காக  செம்படவன் காடு பைபாஸ்  ஆலங்காடு பைபாஸ் போன்ற இடங்களில் வாகன சோதனை செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது  மற்றும் நகரின் முக்கிய இடங்களிலும் எல்லா பள்ளிவாசல்கள் முன்பும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்
 
   
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.