உலகின் நீண்ட தூர நான் - ஸ்டாப் விமான சேவை - ஏர் இந்தியா புதிய சாதனை !உலகின் நீண்ட தூர இடைநில்லா விமான சேவை இப்போது ஏர் இந்தியாவிடம்! டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் ஃப்ரான்சிஸ்கோவுக்கு பசிஃபிக் பெருங்கடல் ரூட் வழியாக 14.5 மணிநேரத்தில், 15,300 கிமீ தூரம் ஏர் இந்தியா விமானம் ஒன்று இடையில் நிற்காமல் இயக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் எமிரேட்ஸ் இயக்கிய துபாய் - ஆக்லாந்து ட்ரிப்தான் உலகின் தொலைதூர நான் - ஸ்டாப் ட்ரிப்பாக கருதப்பட்டது.

அட்லான்டிக் கடல் வழியாக செல்வதைவிட பசிஃபிக் ரூட் 1,400 கிமீ அதிக தூரம். ஆனால், இரண்டு மணி நேரம் விரைவாகவே விமானம் சான் ஃப்ரான்சிஸ்கோவை சென்றடைந்தது. காரணம், அட்லான்டிக் கடல் வழியாக சென்றால் எதிர்காற்று மிக அதிகம் என்கிறது ஏர் இந்தியா. பசிஃபிக் வழியாக சென்றால், காற்றின் போக்கிலேயே வேகமாக விமானத்தை இயக்கி, அதிக தூரத்தை குறைந்த நேரத்தில் கடக்க முடியுமாம்.

நான்கு பைலட்டுகள்,  ராஜ்னீஷ் ஷர்மா, கௌதம் வர்மா, எஸ்.எம்.பலேக்கர், எம்.ஏ.கான் மற்றும் 10 விமானப் பணியாளர்கள் இதற்காக உழைத்திருக்கிறார்கள். போயிங் 777-200 லாங் ரேஞ்ச் ரக விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு மணிநேரம் பறப்பதற்கு 9,600 லிட்டர் எரிபொருளை 'குடிக்கும்!'

ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குத்தான் இந்த சாதனை நிற்கும். காரணம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூரில் இருந்து நியூயார்க் நகருக்கு இடையில் நிற்காமல் 19 மணிநேரத்தில் 16,500 கிமீ செல்லக்கூடிய விமான சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.

நன்றி: விகடன்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.