கலவரத்தை தூண்ட தன் ஸ்கூட்டரை தானே எரித்த இந்து அதிரடிபடை? பொதுச்செயலாளர் கைதுஸ்கூட்டரை தானே எரித்துவிட்டு, தீவிரவாதிகள் எரித்ததாக நாடகமாடிய இந்து  அதிரடிப்படை பொது செயலாளரை போலீசார் கைது செய்தனர். கோபி அருகே உள்ள  எஸ்.கணபதிபாளையத்தை சேர்ந்தவர் ராஜகுரு(31). இவர் இந்து அதிரடிப்படையின்  மாநில பொதுச்செயலாளராக உள்ளார். கடந்த 1ம் தேதி இரவு நான்கு பேர் கொண்ட  தீவிரவாதிகள் தன்னை துரத்தியதாகவும், அதிலிருந்து தான் தப்பி ஓடியதாகவும்,  தனது ஸ்கூட்டருக்கு அந்த கும்பல் தீவைத்து விட்டதாகவும் கூறி பரபரப்பை  ஏற்படுத்தினார். இதுகுறித்து புகார் அளிக்கும்படி போலீசார் அவரிடம்  கூறியும் அவர் புகார் அளிக்க மறுத்துவிட்டார். தனக்கு தீவிரவாதிகளிடம்  இருந்து மிரட்டல் வருவதாக ஏற்கனவே புகார் அளித்தும் அதன் மீது போலீசார்  நடவடிக்கை எடுக்கவில்லை, எனவே மீண்டும் புகார் அளிக்க போவதில்லை என  தெரிவித்து நழுவினார்.இந்நிலையில், கூகலூர் வி.ஏ.ஓ. வெங்கடாசலம்  அளித்த புகாரின் பேரில், கோபி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை  நடத்தினர். விசாரணையில் ராஜகுரு தன்னுடைய ஸ்கூட்டரை அவரே எரித்துவிட்டு நாடகமாடியது  தெரியவந்தது.இதனை அடுத்து நேற்று முன்தினம் இரவு கோபி போலீசார் அவரை கைது  செய்தனர்.

நன்றி: தினகரன் (04.10.2016)
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.