கள்ள துப்பாக்கி வியாபாரி ராபர்ட் கென்னடி கைதுதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி, கடந்த 12ம் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஓடும் பஸ்சில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.  இக்கொலை தொடர்பாக கோவில்பட்டியை சேர்ந்த சிடி கடை அதிபர் முகமது ரபீக்(45) என்பவர் மதுரை ஜேஎம்-3 கோர்ட்டில் சரண் அடைந்தார். இவரது மகன் அப்துல்லா கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக கருப்பசாமி கொல்லப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ரபீக்கை 4 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி,  சென்னை கள்ளச் சந்தையில் வாங்கியதாக தெரியவந்தது.

இந்நிலையில் தனிப்படையினர் நேற்று சென்னை  கொடுங்ைகயூர் விவேகானந்தா நகர் நக்கீரன் தெருவைச் சேர்ந்த ராபர்ட் கென்னடி(42) என்பவரை கைது செய்தனர். இவர், மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், கள்ளச்சந்தை மூலம் பலருக்கு துப்பாக்கி சப்ளை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. ரபீக்கிற்கும், கென்னடிக்கும் என்ன தொடர்பு? வேறு யாருக்கெல்லாம் துப்பாக்கி விற்றுள்ளார்? நக்சலைட்டுகளுடன் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.