முத்துப்பேட்டை அருகே சாலை விபத்து ஒருவர் மரணம்....முத்துப்பேட்டை அருகே உள்ள உப்பூர் காசடிக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது50). மரம் வெட்டும் தொழிலாளி. இவர் நேற்று உப்பூரில் இருந்து நாச்சிக்குளத்திற்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். உப்பூர் மெயின் சாலையில் கொண்டிருந்தபோது பின்னால் வந்த டேங்கர்லாரி, மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் காளிமுத்து மீது லாரி ஏறி, இறங்கியதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காளிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.