துருக்கியில் மீண்டும் மரண தண்டனை சட்டமாக்கப்படுகிறது!.துருக்கியில் மீண்டும் மரண தண்டனை விதிக்கப்படுவதற்கான மசோதாவை அந்நாட்டு அரசாங்கம், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் எனத் துருக்கிய அதிபர் ரஜப் தய்யிப் எர்துகான் கூறியுள்ளார்.

அந்த மசோதாவுக்கு, நாடாளுமன்ற ஒப்புதல் கிடைத்தால், அது செயல்படுத்தப்படும் என திரு. எர்துகான் கூறினார்.

துருக்கி, ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்கான எண்ணம் கொண்டுள்ளது. அதன் காரணமாக, 2004-ஆம் ஆண்டிலிருந்து, மரண தண்டனை துருக்கியில் நிறுத்தப்பட்டது

துருக்கியில் சில மாதங்களுக்கு முன்னர் ஆட்சி கவிழ்ப்புத் திட்டம் ஒன்று தோல்வியுற்றது. அதனை தொடர்ந்து, எர்துகான் மீண்டும் மரண தண்டனை விதிக்கப்படுவதற்கான அழைப்பை விடுத்திருக்கிறார்.

இருப்பினும், அவ்வாறு செய்வதால், துருக்கி, ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்கான சாத்தியம் பாதிக்கப்படும் என ஜெர்மனி எச்சரித்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.