ரத்த அழுத்தத்தை குறைக்கும் சீத்தாபழம்உடல் சூட்டை தணிக்க கூடியதும், புண்களை ஆற்றும் தன்மை கொண்டதும், ரத்த அழுத்தத்தை குறைக்கவல்லதும், உடல் எடையை அதிகரிக்க கூடியதுமான சீத்தா பழத்தின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம்.  இந்த சீசனில் எளிதாக கிடைக்கூடிய சீத்தாபழம் அற்புதமான மருந்தாகி பலன் தருகிறது. இதனுடைய இலை, விதைகள் மருந்தாக பயன்படுகிறது. இது பேதியை நிறுத்தக் கூடியது.

ரத்த ஓட்டத்தை சீராக்கி ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்ட சீத்தாபழம் சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாகிறது. கிருமி நாசினியாக விளங்குகிறது. சீத்தா மரத்தின் இலையை பயன்படுத்தி தேனீர் தயாரிக்கலாம். சீத்தா மரத்தின் இலைகளை சுமார் 5 எடுத்து துண்டுகளாக்கி ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி இரவு நேரத்தில் 50 மில்லி அளவுக்கு வாரம் ஒருமுறை என 3 வாரம் குடித்துவர வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றும்.

சீத்தாமரத்தின் இலைகளை தேனீராக்கி இளஞ்சூட்டுடன் கழுவுவதால் ஆறாத புண்கள் குணமாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் ஆறாத புண்கள் வெகுவிரைவில் குணமாகும். கிருமிகள் விலகிப் போகும். சீத்தா மர இலைகள் பூச்சிகொல்லியாக விளங்குகிறது. பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை அழிக்க கூடியது. சீத்தா மரத்தின் இலைகளை பயன்படுத்தி புண்களை ஆற்றும் தைலம் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: சீத்தா மரத்தின் இலைகள், தேங்காய் எண்ணெய். சீத்தா மரத்தின் இலைகளை நீர்விடாமல் பசையாக அரைத்து எடுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன் சீதா இலை பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிகட்டி மேல்பூச்சாக போடும்போது புண்கள் சீழ் பிடிக்காமல் ஆறும். கிருமிகள் தொற்றாத வண்ணம் தடுக்கிறது.

சீத்தாபழத்தை பயன்படுத்தி உடல் சூட்டை தணித்து எடையை அதிகரிக்கும் மருந்து குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: சீத்தா பழம், வெல்லம், நெய். ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் சிறிது நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் அரைத்து வைத்திருக்கும் சீதா பாழத்தை சேர்த்து வேக வைக்க வேண்டும். பின்னர், சிறிது நெய் சேர்க்கவும். இதை 2 ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டுவர உடல் சூடு தணிந்து, உடல் எடை அதிகரிக்கும். வெல்லப்பாகுடன் சாப்பிடுவதால் சளிப் பிடிக்காது.

பல்வேறு நன்மைகளை கொண்ட சீத்தா பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. இதில், கால்சியம், இரும்பு சத்துகளும் உள்ளன. டைபாய்டு காய்ச்சல் வந்தவர்கள் அன்றாடம் ஒன்றிரண்டு பழத்தை சாப்பிட்டால் நல்ல சத்துக்கள் கிடைக்கும். காசநோயாளிகள் சத்துள்ள உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டியிருப்பதால், சீத்தாபழத்தை சாப்பிட்டுவரலாம். டைபாய்டு, காசநோயை போக்கும் மருந்தாக விளங்குகிறது.

அல்சரை வெகு சீக்கிரத்தில் குணப்படுத்தும். சீத்தா பழத்தை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் ரத்த ஓட்டம் சீராகிறது. ரத்த அழுத்தம் குறைகிறது. மூளைக்கு செல்லும் ரத்தத்தை துரிதமாக செலுத்துகிறது. சீத்தாபழம் உச்சி முதல் பாதம் வரை நமக்கு நன்மை தருகிறது. எலும்பு, பற்களுக்கு பலத்தை கொடுக்கிறது. சீத்தா பழத்தை குழந்தைகளுக்கு கொடுத்துவர நல்ல வளர்ச்சி இருக்கும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.