ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு நிர்ணயிக்கவில்லை: உணவுத் துறை விளக்கம்!ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று தமிழக உணவுத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நவம்பர் 1ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் உணவு பொருட்கள் வழங்கப்படாது என்றும் தகவல்கள் வெளியாகின. இதனால் பொதுமக்கள் இடையே குழப்பம் ஏற்பட்டது.

இதனால், ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்கும் விவகாரம் குறித்து தமிழக உணவுத் துறை சார்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும். ஆனால், இதற்காக காலக்கெடு எதுவும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் அட்டை வடிவிலான ரேஷன் கார்டுக்கு ஆதார் எண் அவசியம் என்பதால், பொதுமக்கள், தாங்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை கண்டிப்பாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி:தினமணி
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.