தீபாவளியன்று கடமையாற்றிய போலீசாருக்கு இனிப்பு வழங்கி நெகிழ செய்த கீழக்கரை மாணவ, மாணவியர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த பள்ளி மாணவ சிறுவ சிறுமியர் தீபாவளியன்று விடுப்பின்றி கடமையாற்றிய காவல்துறையினருக்கு நேரில் சென்று வாழ்த்தி இனிப்பு வழங்கி  நெகிழ செய்தனர். பண்டிகை தினமானலும் தங்களுடைய  குடும்பத்தினருடன் தங்கள்து மகிழ்ச்சியை நேரத்தை செலவிட முடியாமல் நாட்டு மக்களுக்காக‌ விடுப்பின்றி கடமையை செய்து வரும் ராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் இன்னும் பல்வேறு துறையினர் என்றென்றும் பாராட்டுக்குறியவர்கள்.

தீபாவளி பண்டிகை தினத்திலும் விடுப்பின்றி, ஓய்வின்றி பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல் துறையினரின் பணியைப் பாராட்டும் விதமாகவும் மாணவர்களும் இச்சேவை குறித்து அறிந்து கொள்ளும் பொருட்டும், கீழக்கரை கண்ணாடி வாப்பா இண்டர்நேஷனல் பள்ளி மாணவர் மன்ற மாணவ மாணவியர் கீழக்கரை டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்று, அங்கு சிறப்பு காவல் பணிக்காக வந்திருந்த அரியலூர் ஏ.டி.எஸ்.பி. அசோக்குமார் மற்றும் பணியாற்றிக் கொண்டிருந்த அனைத்து காவலர்களுக்கும் வாழ்த்து கூறி இனிப்புகள் பகிர்ந்தனர். வெளியிடப் பணிக்கு சென்றிருந்த டி. எஸ். பி. மகேஸ்வரி அவர்களுக்கும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.

அதுபோல்,  கீழக்கரை காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி,  நிலைய எழுத்தர் சந்திரசேகர்,  திருப்புல்லாணி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வேதவள்ளி மற்றும் பணியிலிருந்த காவலர்கள், மேலும் திருப்புல்லாணி அருகே இரண்டு செக் போஸ்ட்களில் சிறப்பு பணியிலிருந்த காவலர்களையும் சந்தித்து வாழ்த்துகளும் இனிப்புகளும் பறிமாறினர். விடுமுறை தினத்திலும் மாணவ மணிகள் நேரில் வந்து வாழ்த்தியதை காவல் துறையினர் மன நெகிழ்ச்சியுடன் ஏற்று மகிழ்ந்தனர். மாணவர்களுடன் பள்ளி முதல்வர் இராஜேஷ் கிருஷ்ணன்,  மேலாளர் அபுல் ஹசன், ஆசிரியர்கள் திலக் கடல், விஷ்ணு தேவன் ஆகியோரும் சென்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.