உலகத்திற்கே சிறந்த திருமண சட்டங்களை தந்த மார்க்கம் இஸ்லாம் : சரீரத்தை இழந்தாலும் ஷரிஅத்தை இழக்க மாட்டோம்.....!!முஸ்லிமான ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக இருந்தால் வரதட்சணையாக எதுவும் வாங்கக்கூடாது. மணப்பெண் கேட்கும் (மஹரை) மணக்கொடையை முன் கூட்டியே கொடுத்து திருமணம் முடிக்க வேண்டும். மலையளவு தங்கத்தையும், வைரத்தையும், பணத்தையும் கேட்டாலும் கொடுத்து தான் திருமணம் முடிக்க வேண்டும். இதுதான் இஸ்லாமிய சட்டம்.  

திருமணத்திற்கு பின் கணவன் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ய விரும்பினால் ஜமாஅத்திடம் கூறுவார். ஜமாஅத் சார்பில் இரு தரப்பிடமும் பேச்சு வார்த்தை நடத்தி இணைத்து வைப்பார்கள்.

பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாதபட்சத்தில் கணவன் தன்னுடைய மனைவியை தலாக் சொல்லி பிரிந்து விடுவார். திருமணத்திற்கு முன்பு கணவன் கொடுத்த மஹர் தொகையை மனைவியே வைத்துக்கொள்வார்.

இருவரும் பிரிந்த பின்பு ஆண் வேறொரு பெண்ணையும், பெண் வேறொரு ஆணையும் திருமணம் செய்து கொள்ளலாம்.

ஒருவேளை இருவரும் யாரையும் திருமணம் செய்யாமல் மனம் மாறி மீண்டும் இருவரும் இணைந்து வாழ விரும்பினால் (பிரிந்தவர்கள் இரண்டாவது முறையாக) இணைந்து வாழ இஸ்லாம் அனுமதி அளித்துள்ளது.

அவ்வாறு இரண்டாவது முறையாக இணைந்து வாழும்போது இரண்டாவது முறையும் விவாகரத்து செய்ய விரும்பினால் இரண்டாவது முறையாக தலாக் சொல்லி பிரிந்து விடலாம்.

அவ்வாறு பிரிந்த பின் ஒருவேளை இருவரும் யாரையும் திருமணம் செய்யாமல் மனம் மாறி மீண்டும் இருவரும் இணைந்து வாழ விரும்பினால் (பிரிந்தவர்கள் மூன்றாவது முறையாக) இணைந்து வாழ இஸ்லாம் அனுமதி அளித்துள்ளது.

அவ்வாறு மூன்றாவது முறையாக இணைந்து வாழும்போது மூன்றாவது முறையும் விவாகரத்து செய்ய விரும்பினால் மூன்றாவது முறையாக தலாக் சொல்லி பிரிந்து விடலாம்.

இவ்வாறு மூன்று அவகாசங்களில் சொல்லப்படும் தலாக்கிற்கு முத்தலாக் என்று பெயர்.

மூன்று முறை தலாக் சொல்லிய பிறகு நான்காவதாக மீண்டும் இணைய விரும்பினால் நேரடியாக இணைய முடியாது.

அந்த பெண் வேறு ஒரு ஆணை திருமணம் முடித்து அந்த கணவரை விவாகரத்து பெற்று மீண்டும் இவருடன் இணைவதற்கு இஸ்லாம் அனுமதி வழங்கியுள்ளது.

அதாவது ஒரு கணவன் கோபத்தின் காரணமாக மனைவியை விவாகரத்து செய்து விட்டால் கூட மீண்டும் இணைந்து வாழ சலுகையை தந்த மார்க்கம் இஸ்லாம். அவ்வாறு இரண்டு முறை, மூன்று முறை சலுகை வழங்கிய மார்க்கம் இஸ்லாம்.

மூன்றாவது முறையாக தலாக் சொல்லும்போது கூட அடுத்த முறை உனக்கு கிடைக்க மாட்டார் என்று எச்சரிக்கையும் செய்துள்ள மார்க்கம் இஸ்லாம்.

இப்படி திருமண வாழ்க்கைக்கு தேவையான மிக சிறப்பான வாய்ப்பை உலகிலேயே வழங்கியுள்ள ஒரே மார்க்கம் இஸ்லாம், ஒரே வேதம் திருக்குர்ஆன்...

இதேப்போன்று மனைவிக்கு கணவனை பிடிக்காவிட்டால் எந்த வித நிபந்தனையுமின்றி கணவனை விவாகரத்து செய்ய குலா என்ற உரிமையை வழங்கியுள்ள மார்க்கம் இஸ்லாம், பெண்கள் குலா கொடுக்கும்போது திருமணத்திற்கு முன்பு தாம் பெற்ற மஹரை திருப்பி ஒப்படைத்து விட வேண்டும். அதை தவிர வேறு எந்த நிபந்தனையும் இல்லை,

2016 ஆம் ஆண்டில் பெண்ணுரிமை பற்றி விவாதம் நடத்தும் சூழலில் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு திருமணத்திற்கு சம்மதம் பெரும் உரிமை, மஹர் தொகையை தீர்மானிக்கும் உரிமை, திருமணத்தை ரத்து செய்யும் உரிமை, மறுமணம் செய்யும் உரிமை என்று அனைத்து பெண்ணுரிமைகளையும் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கொடுத்த மார்க்கம் இஸ்லாம்.

இதில் வட இந்தியாவில் குர்ஆனை சரியான முறையில் விளங்காத விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர்...

மூன்று அவகாசங்களில் மூன்று முறை சொல்லக்கூடிய தலாக்கை மனைவி மீது கொண்ட கோபத்தின் காரணமாக ஒரே நேரத்தில் தலாக், தலாக், தலாக் என்று சொல்லிவிட்டு நிரந்தரமாக பிரிந்து விட்டார்கள்.

இவ்வாறு ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக், தலாக், தலாக் என்று சொல்லும் முத்தலாக் குர்ஆனுக்கே மாற்றமானது. இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரானது.

வட இந்தியாவில் யாரோ ஒரு சிலர் குர்ஆனை விளங்காமல் சொன்னதற்கு இஸ்லாம் வழங்கியுள்ள ஷரியத் சட்டத்தையே ரத்து செய்வோம் என்று சொல்வது மிகத்தெளிவான இந்துத்துவ பாசிச பயங்கரவாதம் ஆகும்.

ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக், தலாக், தலாக் என்று சொல்வதினால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுவார்கள் என்று பாஜக அரசு கருதுமேயானால் ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்வதற்கு மட்டும் தடை விதிக்க வேண்டும். அதைவிடுத்து முஸ்லிம் ஷரியத் சட்டத்தையே ரத்து செய்வோம் என்று சொல்வது பாஜக அரசின் மதவெறி அரசியலாகும்.

ஷரியத் சட்டத்தை ரத்து செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.உலகத்திற்கே சிறந்த திருமண சட்டங்களை தந்த மார்க்கம் இஸ்லாம், சரீரத்தை இழந்தாலும் ஷரிஅத்தை இழக்க மாட்டோம்,

அஞ்சுவதும், அடிப்பணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே !! இன்னொரு சுதந்திர போராட்டத்திற்கும் தயாராகி விட்டோம் !!
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.