முத்துப்பேட்டை பிரிலியண்ட் பள்ளியில் பேரிடர் விழிப்புணர்வு முகாம்முத்துப்பேட்டையில் பேரிடர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பிரிலியண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் உலக வங்கி நிதி உதவியுடன் நடத்தப்படும் சமுதாய அடிப்படையிலான பேரிடர் குறைப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பேரிடர் காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், பேரிடர் காலத்தில் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது குறித்த பயிற்சிகள் முத்துப்பேட்டை 108 ஆம்புலன்ஸ் மருத்துவகுழுவினரால் மாணவ, மாணவிகளுக்கு அளிக்கப்பட்டது. இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்,  பள்ளியின் தாளாளர் முகம்மது யாகூப், பள்ளி முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர், ஆசிரியைகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.