இஸ்லாமியர்களை சீண்டும் மத்திய காவி அரசு...! மோடி அரசுக்கு இஸ்லாமியர்கள் எச்சரிக்கை....!!ஷரியத் சட்டத்தில் கை வைத்தால் நாடே ஸ்தம்பிக்கும்....!

மோடி அரசுக்கு இஸ்லாமியர்கள் எச்சரிக்கை....!!

பொது சிவில் சட்டத்தை கொண்டுவந்து இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தை நீக்க மத்திய மோடி அரசு முயற்சித்து வருவது அனைவரும் அறிந்ததே.

இதன் ஒரு பகுதியாக தலாக் முறையை மாற்ற கருத்து கேட்பை தொடங்கியுள்ளார் மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.

அதாவது மற்ற இஸ்லாமிய நாடுகள் திருமண சட்டத்தில் மாற்றம் கொண்டு வரும் போது இந்தியாவில் மட்டும் எதிர்ப்பது ஏன் என்று கேள்வியையும் முன் வைத்துள்ளார்.

இந்தியாவை ஆட்சி செய்யும் மோடி அரசுக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்கிறோம். இஸ்லாமியர்களை சீண்டும் வேலையில் ஈடுபட்டால் அதற்கான விளைவுகளையும் சந்திக்க நேரிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இறைவனின் சட்டத்தில் கை வைக்க நினைத்தால் நாடு ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டங்களை மேற்கொள்ளவும் தயங்க மாட்டோம்.

மதச்சாற்பற்ற நாட்டில் அவரவர் மத சட்டங்களை மேற்கொள்ள அனைத்து உரிமைகளை வழங்கியுள்ளது இந்திய சட்டம். ஜனநாயகத்தை கேலி கூத்தாக்க துடிக்கும் மோடி அரசு இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்த்துக் கொள்வதே நல்லது. மக்கள் கிளர்ச்சி ஏற்ப்பட்டால் மோடி அரசு இருந்த இடம் தெரியாமல் போகும்.

ஷரியத் சட்டத்தில் கை வைத்தால் என்னவாகும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் சரி...

ஆட்சி செய்ய தகுதியற்ற மோடி இதுபோன்ற கீழ் தரமான வேலைகளில் ஈடுபடுவது முதல் முறையல்ல.

ராணுவ தாக்குகுல் வீடியோ (Surgical Strikes) மற்றும் காவிரி பிரச்சினையை திசைதிருப்ப தலாக் பற்றிய பிரச்சனையை கையிலெடுத்துள்ளது கையாலாகாத மோடி அரசு.

எதையும் எதிர்கொள்ள இஸ்லாமிய சமுதாயம் தயாராகவே இருக்கிறது என்பதை மற்றுமொரு முறை மோடி அரசுக்கு கூறிக்கொள்கிறோம்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.