சமூக நல்லிணக்கத்தில் இஸ்லாமியர்கள் - வரலாற்று நிகழ்வுடாக்டர் அம்பேத்கார் அவர்களை அரசியல் நிர்ணய சபைக்கு உள்ளே கொண்டுவந்ததே முஸ்லிம்கள்தான் எத்தனைபேருக்கு தெரியும்

அரசியல் நிர்ணய சபையில் காங்கிரஸ் வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் அம்பேதகர் பெயர் இடம் பெறவில்லை. இதை கேள்விப்பட்ட முஸ்லீம் லீக் தலைவர்கள் அம்பேத்கார் அவர்களை முஸ்லீம் லீக் வேட்பாளராக அறிவித்து வெற்றி பெறச் செய்து அம்பேத்கார் அவர்களை அரசியல் நிர்ணய சபையில் அமரவைத்து அழகுபார்த்தார்கள் முஸ்லிம்கள்.

காமராஜர் வேட்பாளராக நின்ற குடியாத்தம் தொகுதியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலை வந்தபோது காயிதே மில்லத் அவர்கள் குடியாத்தம் தொகுதியில் முகாமிட்டு முஸ்லிம்களின் ஓட்டு அனைத்தும் கர்மவீரர் காமராஜருக்கு விழுந்தது. காமராஜரை வெற்றிபெற செய்தார்கள் முஸ்லிம்கள். காமராஜர் காயிதே மில்லத் வீட்டிற்க்கே சென்று நன்றி தெரிவித்தார்.

இதுபோன்ற சமூக நல்லிணக்கத்தை விரும்புபவர்கள் நாங்கள்.

-எடிட்டர் அலாவுதீன்-
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.