முத்துப்பேட்டையில் இருந்து திருவாரூருக்கு நேரடி பஸ் வசதி வர்த்தக கழக கூட்டத்தில் தீர்மானம்முத்துப்பேட்டையில் இருந்து திருவாரூருக்கு நேரடி பஸ் வசதி வேண்டும் என்று வர்த்தக கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முத்துப்பேட்டை வர்த்தக கழக செயற்குழு கூட்டம் தலைவர் ராஜாராம் தலைமையில் நடைபெற்றது. பொது செயலாளர் கண்ணன் மாதாந்திர செயல் அறிக்கை வசித்தார். துணைத்தலைவர் மெட்ரோ மாலிக் வரவேற்றார்.

கூட்டத்தில், முத்துப்பேட்டையில் மாதந்தோறும் மின்சார வாரியம் பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்வதை வியாழக்கிழமை தவிர்த்து மற்ற கிழமைகளில் மேற்கொள்ள வேண்டும். முத்துப்பேட்டையிலிருந்து மாவட்ட தலைநகரமான திருவாரூருக்கு இதுவரை நேரடி பஸ் வசதி கிடையாது. வர்த்தகக் கழகமும் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தபயனும் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் பல்வேறு பணிகளுக்கு செல்ல மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

எனவே இனியும் அரசு, போக்குவரத்து துறை காலதாமதம் ஏற்படுத்தாமல் உடனடியாக காலை, மாலை, இரவு நேரங்களில் நேரடி பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இதுகுறித்து கும்பகோணம் போக்குவரத்து கழகத்திற்கு மனு அனுப்புவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் செயற்குழு உறுப்பினர்கள் அசோகன், இர்பான் ஹைதர் அலி, சகாப்தீன், கோவிந்தராஜ், ஹக்கீம், பேட்டை ராஜேஸ்கண்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணைத்தலைவர் நைனா முகமது நன்றி கூறினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.