துபாய் மரீனா படகு போக்குவரத்திற்கு இனி 'நோல் கார்டுகள்' !துபாய் சாலை மற்றும் போக்குவரத்து துறையின் (RTA) 'நோல் கார்டுகள்' (NOL Cards) எனப்படும் பயண அனுமதி அட்டைகள் பஸ், மெட்ரோ மற்றும் பூங்கா அனுமதிகளுக்கு ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது, வாட்டர் பஸ்கள் எனப்படும் படகுகளில் மரீனா படகு துறைகள் எனப்படும் மரீனா புரோமினேட், மரீனா வாக், மரீனா மால் மற்றும் மரீனா டெர்ரேஸ் ஆகிய 4 நிலையங்களுக்கிடையே பயணம் செய்யும் போது 'நோல் கார்டுகள்' மூலம் பயணம் கட்டணம் செலுத்திடும் வசதியை துபை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. எனினும், துபை வாட்டர் பஸ்களில் பயணம் செய்யுமுன் குறைந்தபட்சம் 11 திர்ஹம் நோல் கார்டுகளில் முன்பணம் நிரப்பப்பட்டிருக்க வேண்டும்.

துபை வாட்டர் பஸ் சேவை நேரங்கள்:
1. தினமும் தொடர்ச்சியாக ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் காலை 10 மணிமுதல் இரவு 11 மணிவரையும்
2. வெள்ளிக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பகல் 12 மணிமுதல் நள்ளிரவு 12 வரை இயங்கும்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.