முஸ்லிம் சகோதரிக்கு வேலைவழங்க மறுத்த, பல் மருத்துவர் மீது வழக்கு.!ஜேர்மனி நாட்டில் முகத்திரை அணிந்துள்ள காரணத்திற்காக இஸ்லாமிய பெண் ஒருவருக்கு வேலை வழங்க முடியாது என மறுத்த பல் மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் உள்ள Stuttgart நகரில் பல் மருத்துவர் ஒருவர் திறமை மற்றும் அனுபவம் வாய்ந்த செவிலியர்கள் தேவை என விளம்பரம் அளித்துள்ளார்.

இந்த விளம்பரத்தை பார்த்த இஸ்லாமிய பெண் ஒருவர் பணிக்கு விண்ணப்பம் செய்துள்ளார்.

பல் மருத்துவரின் அலுவலகத்தின் நிகழ்ந்த நேர்காணலின்போது அப்பெண்ணிற்கு வேலை வழங்க முடியாது என மருத்துவர் கூறியுள்ளார்.

‘இந்த மருத்துவமனையில் முகத்திரை அணிந்துள்ள இஸ்லாமிய பெண்கள் பணியில் அமர்த்தப்பட மாட்டார்கள்’ என காரணமும் கூறியுள்ளார்.

பல் மருத்துவரின் பதிலால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் தற்போது நீதிமன்றத்தில் மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

இது குறித்து பெண்ணின் வழக்கறிஞர் பேசியபோது, ‘ஜேர்மனி நாட்டின் சட்டப்படி, ஒருவரின் வயது, இனம் மற்றும் மதத்தை அடிப்படையாக கொண்டு பணி வழங்க முடிவு செய்யக்கூடாது.

திறமையும் அனுபவமும் உள்ள இஸ்லாமிய பெண்ணிற்கு பணி வழங்க மறுத்ததன் மூலம் அவருடைய அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக’ தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய பெண்ணிற்கு பணி வழங்க மறுத்ததால் ஏற்பட்ட கண்டனத்திற்கு பிறகு பல் மறுத்துவர் தற்போது இஸ்லாமிய பெண்ணிடமும் பொதுமக்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார்.

எனினும், பல் மருத்துவர் மீதான நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.