கோவை சிறைத்துறையின் அலட்சியத்தால் கைதி இறந்ததாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் திருத்துறைப்பூண்டி அப்துல்ரஹ்மான் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: கடந்த 5ம் தேதி கோவை சிறையில் அப்துல் ஓஜீர் என்ற சிறைவாசி மரணம் அடைந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே அவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய வேண்டுமென்று டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்த சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் ரூ.4,000 கட்டப்பட்டது.
இருப்பினும் அதன்பின் முறையான சிகிச்சை அவருக்கு அளிக்கப்படவில்லை என தெரிகிறது. சம்பவத்தன்று அப்துல் ஓஜீரின் உடல்நிலை மிக கவலைக்கிடமானது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவருக்கு, சாதாரண சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டு சிறைக்கு மீண்டும் கொண்டு வரும் போது மரணத்தை தழுவியுள்ளார். நடந்த சம்பவத்தை பார்க்கும் போது சிறைத்துறையின் அலட்சிய போக்கே இம்மரணத்திற்கு காரணம் என்பது தெரியவருகிறது.
தகுந்த மருத்துவத்தை உரிய நேரத்தில் செய்யாமல் இருந்த சிறைத்துறை அதிகாரிகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வன்மையாக கண்டிக்கிறது. இவர்கள் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்துல் ஓஜீரின் குடும்பத்தினருக்கு ரூ20 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.