காந்தி ஜெயந்தி அன்று காந்தியை கொன்ற கோட்சே சிலை திறப்புகாந்தி பிறந்த தினமான அக்டோபர் 2 ல் காந்தியை கொலை செய்தவனான கோட்சேயின் முதல் சிலையை அகில பாரதிய ஹிந்து மகாசபை திறந்துள்ளது. மீரட்டில் உள்ள அவர்களது அலுவலகத்தில் கோட்சேயின் முதல் மார்பளவு சிலை திறக்கப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு சர்ச்சையை கிளப்பிய இந்த கோட்சே சிலை இவ்வருடம் திறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அகில பாரதிய ஹிந்து மகாசபை அமைப்பின் தேசிய துணைத்தலைவர் அசோக் ஷர்மா கூறுகையில் “கடந்த 2014 ல் கோட்சேயின்  சிலையை நிறுவுவதற்காக அடித்தளம் அமைக்கப்பட்ட போது அது காவல்துறையால் தடுக்கப்பட்டு நீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்பட்டது. இம்முறை இதற்கென கடுமையான எச்சரிக்கையுடன் செயல்பட்டு கோட்சே சிலையை காந்தி ஜெயந்தி அன்று திறந்துள்ளோம். இந்த சிலை திறப்பதற்கு இதை விட சிறந்த நாள் இருக்க முடியாது. அனைத்து இந்தியர்களும் காந்தியை பின்பற்றுவதை விட்டுவிட்டு கோட்சேயை பின்பற்ற தொடங்க வேண்டும் என்பதற்கான அறிகுறி இது” என்று கூறினார்.

கோட்சேயின் சிலையை அகில பாரதிய ஹிந்து மகாசபை அலுவலகத்திற்கு அதன் உத்திர பிரதேச தலைவர்களுள் ஒருவரான யோகேந்திர வர்மா எடுத்து வந்தார். மீரட் அலுவலகத்தில் கோட்சே சிலையை திறந்தவர்கள் சிலைக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்தனர்.
உரி தாக்குதலை தொடர்ந்து நடத்தப்பட்ட இந்திய தாக்குதலை குறிப்பிட்ட அசோக் சர்மா, இந்த தாக்குதலே இந்திய அரசு காந்தியின் கொள்கைகளை விட்டு விடுபட வேண்டும் என்பதன் சமிக்கையாகும் என்று கூறினார்.
அனைவரும் கோட்சேயின் கொள்கைகளைத்தான் பின்பற்றுகின்றனர், ஆனால் காந்தியையும் காந்தியின் கொள்கைகளையும் போற்றி வருகிறோம் என்றும் காந்தின் கொள்கைகளை பின்பற்றியிருந்தால் இந்த பதில் தாக்குதல் நடந்திருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
காந்தி பிறந்த தினத்தில் அவரை கொலை செய்த கோட்சேயின் சிலை திறக்கப்பட்டது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.