Game Is Over - Waiting For Result - ராம்குமார் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு



ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள ராம்குமார் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள ராம்குமார் உடல்
பல  போராட்டங்களுக்கு பிறகு பிரேத பரிசோதனை முடிந்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.  மூன்றரை மணி நேரம் நடந்த ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பேர் கொண்ட குழு ராம்குமார் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்தனர். தடயவியல் துறை தலைவர் செல்லக்குமார் தலைமையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.

எய்ம்ஸ் மருத்துவர் சுதிர் கே. குப்தா, வினோத் உள்பட 5 பேர் பரிசோதனை செய்தனர். மருத்துவமனையில் ராம்குமாரின் தந்தை பரமசிவன், வழக்கறிஞர் ராம்ராஜ் ஆகியோர் இருந்தனர். மேலும் நீதிபதி தமிழ்ச்செல்வி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோரும் மருத்துவமனையில் இருந்தனர்.  சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் செப்.18ம் தேதி புழல் சிறையில் தற்கொலை செய்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.