கிறிஸ்துதாஸ் காந்தி IAS! மீது மத துவேச வழக்கு: அர்ஜுன் சம்பத் , கல்யாண ராமன் மீதும் அரசு நடவடிக்கை எடுக்குமா ?ராமரை செருப்பால் அடிப்பேன் என்று கூறிய கிறிஸ்துதாஸ் காந்தி! மீது மத துவேச வழக்கு !! அர்ஜுன் சம்பத் , கல்யாண ராமன்  போன்றோர் இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமியர் மீதும் அவதூறு பரப்புகிறார்கள் இவர்கள் மீதும் அரசு  நடவடிக்கை எடுக்குமா ?


இந்து கடவுள் ராமரை செருப்பால் அடிப்பேன் என்று பேசிய முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி மீது மத துவேஷ பதிவு செய்ய நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கிறிஸ்துதாஸ் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்குகொண்டு பேசும் போது இந்துக்களின் கடவுளான ராமரை செருப்பால் அடிப்பேன் என்று பேசினார். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கிறிஸ்துதாஸ் காந்திக்கு எதிராக கண்டனங்கள் குவிந்தன.

அதனை தொடர்ந்து திருநெல்வேலி கிழக்கு மாவட்ட இந்துமுன்னணி தலைவர் தங்கமனோகர் என்பவர் வள்ளியூர், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 18ம் தேதி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சியில் ராமரை பழித்து பேசிய முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கிறிஸ்துதாஸ் மீதும் மேலும் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி மீதும் அந்த தனியார் தொலைக்காட்சி மீதும் மத துவேஷ பேச்சுக்காக 153 ஏ 1 என்ற இந்திய தண்டனை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

 வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் செந்தில்குமார், பழவூர் காவல்த்துறை  வழக்குப்பதிவு செய்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.