காவேரி பிரச்சினையை மறக்க ISIS பிரச்சினையை உருவாக்கிய மத்திய அரசு - இந்திய தேசிய லீக் கட்சி..காவேரி பிரச்சினையை மடை மாற்றி ISIS பிரச்சினையை உருவாக்கிய மத்திய அரசை இந்திய தேசிய லீக் கட்சி வண்மையாக கண்டிக்கிறது ...

தமிழ்நாட்டில் ISIS களம் அமைத்ததாக  H.ராஜா போன்ற பாசிச சிந்தனை கொண்ட பி.ஜே.பி. தலைவர்களின் தூண்டுதலால் சில ஊடகங்கள்  தலைப்பு செய்தியாக வெளியிட்டு வருவது ஏன் .. ?

தமிழ்நாட்டில் காவேரி நதிநீர் பங்கிட்டு பிரச்சினை உச்சத்தில் உள்ளது மத்திய அரசு கர்நாடகவுக்கு ஆதரவாகவும் தமிழகத்திற்கு எதிராகவும் வெளிப்படையாக செயல்பட்டு வருவது என்பது உலகமறிந்த விஷயம் ...

தமிழக பி.ஜே.பி. தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியவில்லையே என்ன செய்ய என்று மத்திய அரசுக்கு நெறுக்கடி கொடுத்து தொந்தரவு செய்த வண்ணம் இருப்பதை பார்த்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழ்நாட்டிற்க்கு NIA அதிகாரிகளை அனுப்பி சும்மா சும்மா இஸ்லாமிய இளைஞர்களை விசாரணைக்கு அழைத்து சென்று விடுவித்தாலே போதும் தமிழ் நாட்டில் ஊடகங்கள் காவேரியை மறந்து ISIS க்கு மாறிடுவாங்கோ தமிழக மக்களும் காவேரி பிரச்சினை மறந்து விடுவாங்க என ஆலோசனை கூற NIA சமீபத்தில் கோவை உட்பட சில இடங்களில் முஸ்லீம் இளைஞர்களை விசாரனைக்கு அழைத்து சென்று விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது ....

ISIS அமைப்பில் இந்திய முஸ்லீம்கள் இணைந்து ஆயுத பயிற்சி பெற்று ஆயுதம் தாங்கி இந்தியாவில் அரசுக்கு எதிராக செயல்பட்டார்கள் என்ற ஆதாரத்தை யாராவது கொடுத்தால் ... ?

ஆதாரம் தருபவர்களுக்கு
ரூபாய் 10 லட்சம் பரிசு ...

ISIS அமைப்பு ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் பிரதிநிதிகளும் இல்லை..

ISIS, போன்ற அமைப்புகள் இந்திய முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை..

ISIS போன்ற அமைப்புகளில் நம் சமுதாய இளைஞர்கள் இணைய வேண்டிய அவசியமும் இல்லை..

அரசியல் காரணங்களுக்காக சில அரசியல் தலைவர்கள் அடிக்கடி ISIS அமைப்புடன் இணைத்து இந்திய முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து வருகிறார்கள்..

இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்களாகட்டும் வன்முறையாகட்டும் இந்திய முஸ்லிம்களாகிய நாங்களே பார்த்து கொள்வோம்...

தமிழ்நாட்டில் இருந்து அப்படி யாரவது ஒரு முஸ்லீம்
இளைஞர் ISIS அமைப்புக்கு போய் இருந்தால் ஆதாரத்துடன் சொல்ல முடியுமா ?

ISIS போன்ற அமைப்புகளின் ஆதரவோ, உதவியோ இந்திய முஸ்லிம்களுக்கு தேவையற்றது ஆகையால் சிலரின் அரசியல் விளையாட்டுக்கு இந்திய முஸ்லிம்களை பலியாக்காமல் மத்திய, மாநில அரசுகளும் ! உளவுதுறை அமைப்புகளும் கவனமுடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம்...

அன்புடன்.

தடா ஜெ அப்துல் ரகிம்
மாநில தலைவர்
இந்திய தேசிய லீக் கட்சி..
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.