முஸ்லிம்களின் மத நம்பிக்கையில் RSS அஜெண்டாவை திணிக்கக்கூடாது- மாயாவதி கடும் கண்டனம்.....!!முஸ்லிம்களின் மத நம்பிக்கையில் RSS அஜெண்டாவை திணிக்கக்கூடாது : பகுஜன் சமாஜ்வாடி தலைவர் மாயாவதி கடும் கண்டனம்.....!! தெரிவித்துள்ளார் அதுமட்டும்மில்லது முஸ்லிம்களுக்கு  எங்களுடைய அதரவு எப்பொழுதும் உண்டு என்று அறிவித்துள்ளார்

முஸ்லிம்களின் மத நம்பிக்கையில் RSS அஜெண்டாவை திணிக்கக்கூடாது என்று பகுஜன் சமாஜ்வாடி தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது...

இந்தியா என்பது பல்வேறு மதங்களும், சாதிகளும், மாநிலங்களும், மொழிகளும் கொண்ட வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட தேசமாகும்.

அனைத்து சமூக மக்களும் அவரவர் மதப்படி வாழும் உரிமையை இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ளது.

இந்நிலையில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து தொடர்ச்சியாக இந்திய அரசியலமைப்புக்கு எதிராகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தேர்தல் வருவதால் மதத்தின் பெயரால் உத்தர பிரதேசத்தில் ஆட்சியை பிடிப்பதற்காக பொது சிவில் சட்டத்தை பாஜக அரசு கையிலெடுத்துள்ளது.

முஸ்லிம்களின் மத நம்பிக்கையில் RSS அஜெண்டாவை திணிக்கக்கூடாது, சிறுபான்மை மக்களுக்காக பகுஜன் சமாஜ்வாடி எப்போதும் துணை நிற்கும் என்று மாயாவதி கூறியுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.