ஏப்ரல் 1-ந்தேதிக்கு பிறகு பழைய நோட்டுகள் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம்: மத்திய அரசு



அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு ரூ 500, ரூ 1000 நோட்டுகள் வைத்து இருப்பது தண்டனைக் குரிய குற்றமாக கருதப்படும் என்று அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

500,1000 ரூபாய் நோட்டுகளுக்கு கடந்த 8-ந் தேதி தடை விதிக்கப்பட்டது. இந்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த 9-ந் தேதியில் இருந்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகிறார்கள்.

டிசம்பர் 30-ந் தேதி வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ரூபாய் நோட்டுகளை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு வைத்திருப்பது தண்டனைக் குரிய குற்றமாக கருதப்படும் என்று அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு அட்டர்னி ஜெனரலான முகுல் ரோத்தகி, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், நீதிபதி சந்திரகவுடு ஆகியோர் அடங்கிய பெஞ்சில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கூறும் போது, மத்திய அரசு தற்போதைய நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்தார். கடந்த 8-ந்தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் தடைவிதிக்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் பலர் முதல் வகுப்பில் விமான டிக்கட்டுகளை பதிவு செய்துள்ளனர். அதனையும் கண்காணித்து வருகிறோம் என்றார்.

மத்திய அரசு கொண்டுவர உள்ள புதியசட்டத்தால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள 500, 1000 ரூபாய் கருப்பு பணத்தை வைத்திருப்பது அடுத்த ஆண்டு ஏப்ரல் 1- ந் தேதிக்கு பிறகு தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும்.

இது அதிக அளவில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.