அமீரக தேசிய கொடியை அவமதித்தால் 1000 திர்ஹம் அபராதம் - 6 மாதம் சிறை !எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் தனது 45 வது தேசிய தினத்தை கொண்டாட தயாராகி வருகிறது. அமீரகத்தில் வசிக்கும் பன்னாட்டு மக்களும் இந்தக் கொண்டாட்டங்களில் ஆர்வத்துடன் பங்கேற்பர். ஆனால், இந்த ஆர்வம் உங்களுக்கு கோளாறையும் ஏற்படுத்தும் நீங்கள் அதீத ஜாக்கிரதையாக நடந்து கொள்ளாவிட்டால்!

அமீரகத்தின் கொடியை கிழித்தாலோ, கீழே போட்டு விட்டு சென்றாலோ அல்லது கொடிக்கு அவமரியாதை ஏற்படுத்தும் எத்தகைய செயலில் ஈடுபட்டாலோ 1000 திர்ஹம் தண்டம் (Fine) கட்டி 6 மாதம் அடைகாக்கும் (Prison) நிலையும் ஏற்படும் என அமீரக கலாச்சார மற்றும் அறிவு அபிவிருத்திக்கான அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இந்த எச்சரிக்கை அமீரகத்தினர் மற்றும் அனைத்து வெளிநாட்டினருக்கும் பொதுவானதே. இவர்கள் சொன்னால் செய்வார்கள் என்பதும் உங்களுக்கு தெரிந்ததே.

Source: Khaleej Times
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.