குமரி-கேரள எல்லையில் 12 கிலோ தங்கம் பறிமுதல்நாகர்கோவில்: குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்றை நிறுத்தி அமரவிளை சோதனை சாவடியில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை செய்தனர். அப்போது கார் டிக்கியில் சிறிய பெட்டிகளில் 11 தங்க கட்டிகள் பிஸ்கட் வடிவத்தில் இருந்தது. அதனுடன் சிறிது நகைகளும் இருந்தது. இதன் மதிப்பு 3.54 கோடி ரூபாய் ஆகும். மொத்தம் 12.6 கிலோ தங்கம் இருந்தது.

அந்த தங்க கட்டிகள் ஜூவல்லரி ஒன்றுக்கு சொந்தமானது என்றும், திருவனந்தபுரம் கிளைக்கு கொண்டு சென்றபோது பிடிபட்டது என்றும் கூறி அதன் பிரதிநிதி ஒருவர் அதிகாரிகளை அணுகியதாகவும் கூறப்படுகிறது. வரி செலுத்தாமல் காரில் கடத்த முயன்றது தெரியவந்ததால் அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து 9.51 லட்சம் அபராதம் விதித்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.