துபாய் அரசால் கௌரவிக்கப்பட்ட 13 துப்புரவு தொழிலாளர்கள் !சமூகத்தால் அதிகம் ஈர்க்கப்படாத ஆனால் அமீரகத்தின் வளர்ச்சியின் அசைக்க முடியாததொரு அங்கமாக விளங்கும், தாங்களும் வாழ்வில் ஒரு நாள் தங்களின் தூய துய்மைப் பணிக்காக கண்ணியப்படுத்தப்படுவோம் என்ற கற்பனை கூட செய்திராத 13 துப்புரவு 'நாயகர்களை' துபை மாநகராட்சி மற்றும் அமீரகத்தில் கழிவு மேலாண்மை பணியில் ஈடுபட்டுள்ள சில முக்கிய நிறுவனங்களும் இணைந்து "Unsung City Cleaning Heroes Awards" எனும் விருது வழங்கி, பாராட்டுவிழா நடத்தி, பரிசளித்து, நற்சான்றிதழ்கள் தந்து ஊக்கப்படுத்தியுள்ளனர்.

வருடாவருடம் துபை மாநகராட்சி மட்டுமே நடத்தி வந்த இந்த பாராட்டு விழாவை இந்த வருடம் துபை, அபுதாபி, ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமா என 4 அமீரகங்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளனர். துபை மாநகராட்சி ஆரம்பத்தில் சான்றிதழ்களை மட்டுமே வழங்கி வந்த நிலையில் அது சான்றிதழுடன் 300 திர்ஹம் என வளர்ந்து இப்போது 1500 திர்ஹம் என உயர்ந்துள்ளது.

இந்த பரிசையும் பாராட்டையும் தொடர்ந்து 6 வது வருடமாக பெற்றுள்ளார் 15 வருடமாக துப்புரவு பணியாற்றும் கேரளாவைச் சேர்ந்த முஹமது குட்டி. இவருடன் பரிசு பெற்றவர்களில் இன்னும் பல இந்தியர்களுடன் வேறு சில ஆசிய நாடுகளை சேர்ந்தோறும் அடங்குவர்.

அமீரகம் வாரியாக பரிசு பெற்ற இந்த எளிய மனிதர்களை நாமும் வாழ்த்துவோம்.

துபை: முஹமது குட்டி, முஹமது இப்ராஹீம் அலி காதர் மற்றும் கலீல் அஹமது.

அபுதாபி: சுடலாலி உருத்துமாடன், ஷாஜஹான் மியா, பன்டோ மியா மற்றும் அப்துல் காதர் மாணிக் கலீல்

ஷார்ஜா: ஹமீது அலி, முஹமது ஆரிப், நவீது ஹூசைன் மற்றும் முஹமது சந்த்.

ராஸ் அல் கைமா: முனீர் அஹமது முபீஸூல்லாஹ் மற்றும் ஜகீத் ஷஹீதுல்லாஹ்.

நினைவலை: சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் துபை மாநகராட்சி பல்வேறு துறைகளிலும் சிறப்பாக பணியாற்றிய ஜாம்பவான்களை தேர்வு செய்து துபை மன்னர் ஷேக் முஹமது அவர்கள் கையால் விருது வழங்கி 50,000 திர்ஹம் பணப்பரிசும் வழங்கிய போது கடையந்லலூரைச் சேர்ந்த கடைநிலை துப்புரவு பணியாளர் ஒருவரும் ஜாம்பவான்களுடன் சேர்த்து கண்ணியப்படுத்தப்பட்டார்.

இது துபையில் மட்டுமே சாத்தியம்!

Source: Gulf News

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.