முத்துப்பேட்டையில் 2வது நாளாக IOB வங்கி மேலாளரை முற்றுகை வாடிக்கையாளர்கள் ஆவேசம்முத்துப்பேட்டையில் நேற்று 2வது நாளாக வங்கி மேலாளரை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெரு பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த இரு தினங்களாக மக்களிடம் வங்கி நிர்வாகம் பணம் இல்லை என்று தெரிவித்ததாக கூறுப்படுகிறது. நேற்று  முன்தினம் வங்கியில் பணம் இல்லை என்று சொன்னதுடன், வரிசையில் காத்திருந்த பெண்களிடம் வங்கி மேலாளர் எழிலரசன் ஒருமையில் பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் வங்கியை முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் நாளை(நேற்று) பணம் தருவதாக கூறி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் நேற்று காலையும் வங்கியில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. அப்பொழுது வங்கி தரப்பில் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பட்ட தொகை மட்டுமே வழங்கினர். 11 மணி அளவில் வங்கி நிர்வாகம் பணம் தீர்ந்து விட்டது என தெரிவித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள்  கடும் கூச்சலிட்டனர்.

அப்போது வங்கிக்கு பணம் எடுக்க வந்திருந்த முகமது சாதிக் மற்றும் கனி ஆகியோர் வங்கி மேலாளர் எழிலரசனிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர்களை அலட்சியப்படுத்தி வெளியில் போங்கள் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முகமது சாதிக், கனி மற்றும் ஏராளமான வாடிக்கையாளர்கள் அவரது அறைக்கு சென்று வங்கி மேலாளர் எழிலரசனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் வங்கிக்கு வந்த முத்துப்பேட்டை சப்.இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் வாடிக்கையாளர்களிடம் பேசி சமரசம் செய்தனர்.  போலீசாரின் வேண்டுகோளை ஏற்று வாடிக்கையா
ளர்கள் வெளியேறினர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.